மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இன்றைய திராவிட மாடல் அரசின் தொடக்கம் நீதிகட்சிதான்: மனோதங்கராஜ் எம் எல் ஏ, 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > இன்றைய திராவிட மாடல் அரசின் தொடக்கம் நீதிகட்சிதான்: மனோதங்கராஜ் எம் எல் ஏ, 
அரசியல்

இன்றைய திராவிட மாடல் அரசின் தொடக்கம் நீதிகட்சிதான்: மனோதங்கராஜ் எம் எல் ஏ, 

Social Vision
Last updated: 2025/02/23 at 4:35 PM
Social Vision
Share
3 Min Read
SHARE

இன்றைய திராவிட மாடல் அரசின் தொடக்கம் நீதிகட்சிதான்: மனோதங்கராஜ் எம் எல் ஏ, 

கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் ஆழுவாவில் திராவிட மக்கள் சங்கம் – Dravidan People Federation ( DPF) அமைப்பின் சார்பில் திராவிடம் பேசுவோம் என்கிற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

DPF – திராவிட மக்கள் சங்கத்தின் மாநில செயலாளர், வயநாடு நௌஷாத் வகித்தார். இந்த நிகழ்வில் கன்னியாகுமாரி சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், திராவிட தத்துவம் என்கிறதலைப்பில்சிறப்புரையாற்றினார். ஊடவியலாளர் இந்திரகுமார் தேரடி திராவிட இயக்க செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதையும் படிங்க

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 
பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் பேசியதாவது:திராவிடம் என்பது மொழி வழி குடும்பமாக கால்டுவேல் எவ்வாறு வகை படுத்தினார். ஆரிய பார்ப்பனியம் திராவிடம் என்பதை நில அடிப்படையில் எந்த எந்த புராணங்களில் குறித்துள்ளது என்றும், இன ரீதியாக மேல் நாட்டு அறிஞர்கள் திராவிட இன மக்கள் என்பதை எப்படி அடையாளப் படுத்தினார்கள் என்பதை ஆதரபூர்வமாக விளக்கினார். மேலும் திராவிடம் என்கிற வரையறை ஏன் தற்போது வரை தேவை படுகிறது எதனால் திராவிட வரையறைக்குள் நின்று ஏன் பெரியாரும், அண்ணாவும், சமூக அரசியல் தளங்களில் வேலை செய்தார்கள் என்பதை விளக்கி பேசினார்.

இன்றைய திராவிட மாடல் அரசின் தொடக்கம் நீதிகட்சிதான். நீதி கட்சி ஆட்சியில் சமூக நீதிக்கான அடித்தளம், பார்ப்பனரல்லாத மக்களின் சமத்துவ உரிமைக்கான பணிகளை எடுத்துக்கூறினார். தென்னிந்திய நல உரிமை சங்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என்று தொடர்ந்து சமூக நீதி தளத்தில் இயக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

மனுதர்மம் கீழ்நிலை மக்களை படிக்க கூடாது என்றதும், பெண்களை ஒதுக்கி வைத்ததும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வாய்ப்பளிக்கப்படாத மக்களின் உரிமையை திராவிடர் இயக்கம் எவ்வாறு போராடி பெற்றுத்தந்தது என்பதை விளக்கி பேசினார்.

கலைஞர் அரசின் மக்கள் நல திட்டம், அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை, பெரியார் நினைவு சமத்துவபுரம், பெண்களுக்கு சொத்துரிமை என்று பட்டியலிட்டு இன்றைய திராவிட மாடல் அரசின் காலை உணவு திட்டம், தமிழில் படித்தர்களுக்கு முன்னுரிமை, நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம், புதுமை பெண் திட்டம், சமூகநீதி கண்கணிப்பு குழு, பெண் ஒதுவார் நியமனம், மகளிர் மேம்பாடு, பொருளாதார உயர்வு, சமத்துவ சமூக நீதிக்கான திட்டங்களை பட்டியலிட்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை சொன்னார். மேலும் இந்தியாவில் இல்லாத அளவுக்கு கல்வி, உயர்கல்வி, விளையாட்டு துறை, மருத்துவ துறை, வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் திட்டங்கள், சிறும்பான்மையினர் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு, இடஒதுக்கீடு முறை உள்ளிட்டவற்றை அடங்கிய சமத்துவ ஆட்சியை கொடுக்க முடிகிறதென்றல் அதற்கு நிலையான தத்துவம் திராவிடம் தான். திராவிடம் என்பது தற்போது அரசியல் காப்பு ஆயுதமாக பயன்பட்டு வருகிறது என்றும், ஹிந்தி சமஸ்கிரத ஆதிக்க எதிர்ப்பு, மாநில சுயாட்சி கோறுதல், புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு, ஆரிய பண்பாட்டு திணிப்பு எதிர்ப்பு, கூட்டாச்சி தத்துவம் காக்க, இன்று அரணாக இருப்பது திராவிட தத்துவம் என்பதை விளக்கி பேசினார். திராவிட இன மக்களான தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சியில் திராவிடத்தின் பங்கு அதிகம் என்றும், ஆரிய ஆதிக்கத்தை விரட்டிட திராவிட மக்கள் ஒற்றுமையோடு இருக்க வேண்டியது காலத்தின் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

DPF யின் கொடி கருப்பு ஒரு பகுதியும், சிகப்பு ஒரு பகுதியும் சிகப்பில் நீதிக் கட்சியின் தராசு சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த நிகழ்வில் DPF மாநில தலைவர் ஆசிப், வழக்கறிஞர் நீனா ஜோஸ்,  ஆத்தூர் சதீஷ், அரக்கல் அமீர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

TAGGED: Kerala dravidan stock, Manothangaraj, இன்றைய திராவிட மாடல் அரசின் தொடக்கம்நீதிகட்சிதான்:மனோதங்கராஜ் எம் எல் ஏ, மனோதங்கராஜ்
Social Vision February 23, 2025 February 23, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

வேலைவாய்ப்பு

விமானத்துறையில்  வேலை வாய்ப்பு 304 பணியிடங்கள் டிகிரி, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

June 1, 2024
தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மியால் 15 நாட்களில் 5 பேர் தற்கொலை -தடுக்க அரசு நடவடிக்கை தேவை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் 

May 30, 2024
mk-stalin
தமிழ்நாடு

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் எச்சரிக்கை

March 20, 2024
தமிழ்நாடு

16- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.

September 24, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

பாப்பிரெட்பட்டி அரசு கல்லூரியில், டிஜிட்டல் வேலைவாய்ப்பு குறித்து கருத்தரங்கம்.

February 9, 2024
ஆன்மிகம்

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர்,தேரோட்டத் திருவிழா மார்ச்-1 ல் உள்ளூர் விடுமுறை. 

February 27, 2024

மேலும் படிங்க

அரசியல்

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 

February 5, 2026
அரசியல்

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 

February 3, 2026
அரசியல்

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

December 23, 2025
அரசியல்

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

December 6, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?