நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்.
தருமபுரி மாவட்ட உணவுப் பொருள் வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் வெள்ளிகிழமை நடைபெற்றது.
பெண்ணாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் சி.செம்மலை தலைமை வகித்தார்.பென்னாகரம் வட்ட வழங்கல் அலுவலர் ஈஸ்வரி வரவேற்புரையாற்றினார்.நுகர்வோரின் உரிமைகள், கடமைகள், நுகர்வோரின் உரிமை மீறல்கள், நேரடி விற்பனை, நுகர்வோர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள், தரம் குறைவான மின்சாதன பொருட்கள், ஆன்லைன் சேவை குறைபாடு, நிவாரண வழிமுறைகள் பற்றி மகளிர் சுய உதவி குழுவினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் தருமபுரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், பென்னாகரம் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்க பொருளாளர் மணிவண்ணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.இறுதியாக மகளிர் திட்ட சமுதாய வளமைய பயிற்றுநர் சாந்தி நன்றி தெரிவித்தார்.

