காரிமங்கலம் கும்பல் அள்ளி சோதனை சாவடியில் துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாகன தணிக்கை சோதனை சாவடி கும்பாரஅள்ளியில் இயங்கி வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 5000-திற்கும் மேற்பட்ட இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து இந்த சோதனை சாவடியை கடந்து செல்கிறது.
இவ்வழியாக வரும் சரக்கு வாகனங்களை திறம்பட சோதனை செய்யும் பொருட்டு இந்த சோதனை சாவடியை நவீன கேமராக்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வு உபகரணங்களை செயல்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் அவர்களின் உத்தரவின் பேரில் பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு, கும்பாரஅள்ளியில் இயங்கி வரும் சோதனை சாவடியில் எல்இடி மின்விளக்குகள், பேரிகார்டுகள், விபத்து தடுப்பு கூம்புகள், மற்றும் அதிநவீன கேமராக்கள் அமைக்க வேண்டும் என்று காரிமங்கலம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது காரிமங்கலம் காவல் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

