சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி,கலை நிகழ்ச்சி-பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் காவல்துறையினர் சார்பில் சாலைபாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி காவல் நிலையம் முன்பு தொடங்கியது ,இதில் பாலக்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளர் மனோகரன் அவர்கள் தலைமை வகித்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் ராமசாமி கோவில், கடைவீதி வழியாக பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்று, சாலை பாதுகாப்பு குறித்தும் ஹெல்மெட், அணிவதன் அவசியம் குறித்தும், விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மேலும் பொதுமக்களிடம் சாலைபாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதன்பின்பு பேருந்து நிலையத்தில் பாரதி கலைக்குழுவினர் பங்கேற்ற சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் பார்த்திபன், பாலசுந்தரம், சுப்ரமணி, வீரம்மாள், காவல் உதவி ஆய்வாளர்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார், உள்ளிட்ட காவல்துறையினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

