மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வேளாண்  நலத்திட்ட உதவிகள் விவசாயிகளுக்கு கிடைக்க அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் ஆட்சியர் கி. சாந்தி அறிவுறுத்தல் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > வேளாண்  நலத்திட்ட உதவிகள் விவசாயிகளுக்கு கிடைக்க அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் ஆட்சியர் கி. சாந்தி அறிவுறுத்தல் 
அரசு நல திட்டம்

வேளாண்  நலத்திட்ட உதவிகள் விவசாயிகளுக்கு கிடைக்க அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் ஆட்சியர் கி. சாந்தி அறிவுறுத்தல் 

Social Vision
Last updated: 2025/01/31 at 2:10 PM
Social Vision
Share
4 Min Read
SHARE
வேளாண்  நலத்திட்ட உதவிகள் விவசாயிகளுக்கு கிடைக்க அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் ஆட்சியர் கி. சாந்தி அறிவுறுத்தல் 
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (31.01.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் பூச்சி நோய் விழிப்புணர்வு வழிகாட்டியினை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றார்கள். வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி முதல் டிசம்பர்-2025 திங்கள் வரையிலான காலத்திற்கு இயல்பான மழையளவு 942.00 மி.மீ ஆகும். இந்த ஆண்டு தற்பொழுது வரை 17.00 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையில் 2024-2025ஆம் ஆண்டிற்கு 1,72,280 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறுவகைகள் உள்ளிட்ட உணவு தானியபயிர்கள் மற்றும் எண்ணெய்வித்துக்கள், பருத்தி, கரும்புசாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் தற்பொழுது வரை 1,60,084 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
2025-ஆம் ஆண்டிற்கு நெல் வகைகளான ஆடுதுறை 39, நெல் ADT-53 ஆடுதுறை 54, CO-51, BPT 5204, TKM-13, வெள்ளைப்பொன்னி,ADT-37, VGD-1,CO-54,CO-55 ஆகியவை 56.097 மெ.டன் இருப்பும், சிறுதானியங்களான ராகி, சோளம், சாமை, கம்பு, மக்காச்சோளம் 79.80 மெ.டன் இருப்பும், பயறுவகைகளான துவரை, உளுந்து, பச்சைபயறு, காராமணி, கொள்ளு, கொண்டகடலை ஆகியவை 17.43 மெ.டன் இருப்பும், எண்ணெய்வித்துக்களில் நிலக்கடலை, ஆமணக்கு 53.49 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வேளாண் பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு இந்த 2024-2025ஆம் ஆண்டிற்கு 922.00 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதில், ஜனவரி – 2025 திங்கள் வரை 523.90 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தேவையான விதைகளை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.
தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர (2024-25) உரத்தேவை 41,030 மெட்ரிக்டன் என கணக்கிடப்பட்டுள்ளது. 12,156 மெட்ரிக்டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ஜிங்க்பாக்டீரியா, பொட்டாஷ் மொபலிசிங்பாக்டீரியா, அசோஸ்பாஸ், ஜிங்க்சொலிபிலைசிங்பாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் 2024-2025ஆம் ஆண்டிற்கு 55,000 எண்ணிக்கைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு மாதம் முடிய 7,113 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. 51,412 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. உயிர் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 8684 விவசாயிகள் 7062.15 ஏக்கர் பரப்பு பயிர் காப்பீடு செய்துள்ளனர். மேலும், தருமபுரி மாவட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் 2024-2025 ஆம் ஆண்டிற்கு 750.00 ஏக்கர் மல்பரி சாகுபடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு தற்பொழுது வரை 623.75 ஏக்கர் மல்பரி பயிரிடப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் கடந்த 30.12.2024 வரை நெல், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிட்ட 48,797 விவசாயிகளுக்கு ரூ.489.22 கோடி பயிர் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது வரை தருமபுரி மாவட்ட கூட்டுறவுசர்க்கரை ஆலையில் இருப்பு இல்லை, கோபாலபுரம் சுப்பரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 5,892 குவிண்டாலும் சர்க்கரை இருப்பு உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பாரமரிப்புத்துறை, பட்டு வளர்ச்சி துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் மூலம் துறை வாரியான திட்ட விளக்க உரையாற்றப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்கள் மீது  உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசுத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வேளாண்மைத் துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு சரிவர எடுத்துச் சென்று அவர்களின் உற்பத்தியையும், வருமானத்தையும் அதிகரிக்கும் வகையில் வேளாண்மைத் துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கப் பெறுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என மாவட்டஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் எஸ்.மலர்விழி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர்  மரிய ரவி ஜெயக்குமார், தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை (பாலக்கோடு) மாவட்ட வருவாய் அலுவலர் ரவி, கால்நடைபராமரிப்புத்துறை மண்டல துணை இயக்குநர் விஷ்ணுகண்ணன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
TAGGED: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வேளாண்  நலத்திட்ட உதவிகள் விவசாயிகளுக்கு கிடைக்க அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் ஆட்சியர் கி. சாந்தி அறிவுறுத்தல்
Social Vision January 31, 2025 January 31, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

ஓட்டு திருட்டை கண்டித்து தருமபுரி மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு கையெழுத்து இயக்கம் துவக்கம்

October 6, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

பழங்குடி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உடனே விண்ணப்பிக்கலாம்.

May 20, 2024
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 16.7மில்லி மீட்டர் சராசரி மழை அளவு  

October 22, 2025
இந்தியா

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் முனைவர் தொல்.திருமாவளவன் எம்பி வலியுறுத்தல் 

June 25, 2024
அரசியல்

கொரோனாவால் பெற்றோரை இழந்த பெண்களுக்குக் கனிமொழி கருணாநிதியின் முயற்சியால் சொந்த வீடு

March 16, 2024
மாவட்டங்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் பணிகளை புறக்கணித்து 2 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம். 

November 27, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.

February 4, 2026
அரசு நல திட்டம்

தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி

February 3, 2026
அரசு நல திட்டம்

கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

December 14, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர். ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

November 9, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?