மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரசு விடுதியில் குறைபாடு காப்பாளர் தற்காலிக பணிநீக்கம் ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி அதிரடி நடவடிக்கை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > அரசு விடுதியில் குறைபாடு காப்பாளர் தற்காலிக பணிநீக்கம் ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி அதிரடி நடவடிக்கை
அரசு நல திட்டம்

அரசு விடுதியில் குறைபாடு காப்பாளர் தற்காலிக பணிநீக்கம் ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி அதிரடி நடவடிக்கை

Social Vision
Last updated: 2025/01/29 at 1:33 PM
Social Vision
Share
4 Min Read
SHARE
அரசு விடுதியில் குறைபாடு காப்பாளர் தற்காலிக பணிநீக்கம்:ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்திஅதிரடி நடவடிக்கை
தருமபுரி மாவட்டத்தில் 2025 ஜனவரி மாதத்திற்கான “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் காரிமங்கலம் வட்டத்தில் இன்று (29.01.2025) காலை 09.00 மணி முதல் நாளை (30.01.2025) காலை 09.00 மணி வரை மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி  தலைமையில் நடைபெற்று வருகிறது. இத்திட்ட முகாமில் அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இன்று (29.01.2025) தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், மாட்லாம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி,  நேரில் ஆய்வு செய்தார்கள்.
காரிமங்கலம் வட்டம், மாட்லாம்பட்டி பைபாஸ் பிரிவு சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடத்தினை மாவட்ட ஆட்சியர நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதி குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார்.
காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்ததோடு, மருத்துவ உபகரணங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, பெரியாம்பட்டியில் புதிய நூலாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை  நேரில் ஆய்வு செய்தார்கள்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டியில் விவசாயி காளான் வளர்க்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்கள். மேலும், காட்டுசிங்கனஹள்ளி ராஜம் புட் இண்டஸ்ட்ரீஸ்யில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தொழிலாளர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்கள்.
தொடர்ந்து, பெரியாம்பட்டியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் துணிப்பை மற்றும் சணல்பை தயாரிப்பதை மாவட்ட ஆட்சியர  நேரில் ஆய்வு மேற்கொண்டு, துணிப்பை மற்றும் சணல்பை குறித்து கேட்டறிந்தார்கள்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், காரிமங்கலம் பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்கள். மேலும், காரிமங்கலம் பேரூராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டார்கள்.
மேலும், காரிமங்கலம் வட்டம், ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இதனைத்தொடர்ந்து, காரிமங்கலம் தேர்வு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அறிவுசார் மையத்தினை மாவட்ட ஆட்சியர  நேரில் ஆய்வு மேற்கொண்டு, இவ்அறிவுசார் மையத்திற்கு .சிவபிரகாசம் ஐம்பதாயிரம் மதிப்புள்ள புத்தகங்களை வழங்கியதை பார்வையிட்டார்கள். தொடர்ந்து, பெரியாம்பட்டியில் புதிய நூலாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர  நேரில் ஆய்வு செய்தார்கள்.
மேலும், அனைத்து துறை முதல் நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டு, சேவைகள், திட்டப்பணிகளின் நிலை குறித்து கருத்துக்களை பெற்றார்.
ஆய்வினை தொடர்ந்து, காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த மதிப்பாய்வின் போது, வருகைதந்த அலுவலர்கள் களத்தின் சேவைகள், திட்டப்பணிகளின் நிலை குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் பதிவு முகாமை பார்வையிட்டு, நேரிடையாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். மேலும், பொதுமக்கள் அளிக்கும் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும்,இக்கூட்டத்தில்வருவாய்த்துறையின் சார்பில் 24 பயனாளிக்கு ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைபட்டா, இ-பட்டாக்கள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பொம்மஅள்ளி இருளர் காலனியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி ஆய்வு செய்து, இன்றைய தினமே 4 தெரு விளக்குகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு. சாந்தி, துணை இயக்குநர் (மருத்துவம்) மரு.ஜெயந்தி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சுப்பிரமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேசன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர்  மரிய ரவி ஜெயக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் செம்மலை, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர்  பாலகிருஷ்ணன், பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, தனி வட்டாட்சியர் சுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் நீலமேகம், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆயிஷா மற்றும் மாவட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் உள்ளனர்.
TAGGED: அரசு விடுதியில் குறைபாடு காப்பாளர் தற்காலிக பணிநீக்கம் ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி அதிரடி நடவடிக்கை
Social Vision January 29, 2025 January 29, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

June 21, 2024
நிர்மலா தேவி
குற்றம்தமிழ்நாடு

பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு

April 29, 2024
அரசியல்

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

December 6, 2025
அரசியல்வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் 33 சதவீதம் குறைப்பு: எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும். பாமக தலைவர் மரு.அன்புமணி 

July 6, 2024
மாவட்டங்கள்

மூன்று தலைமுறையாக வீடுக்கட்டி குயிருப்போக்கு மனைபட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு

October 27, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி ஜன – ல் கழிவு செய்யப்பட்ட 3 கார்கள் ஏலம் 

December 27, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.

February 4, 2026
அரசு நல திட்டம்

தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி

February 3, 2026
அரசு நல திட்டம்

கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

December 14, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர். ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

November 9, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?