மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சென்னை சங்கமம்’ ஒத்திகை நிகழ்ச்சி’! நாட்டுப்புற கலைஞர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி கருணாநிதி எம்.பி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சினிமா > சென்னை சங்கமம்’ ஒத்திகை நிகழ்ச்சி’! நாட்டுப்புற கலைஞர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி கருணாநிதி எம்.பி
சினிமா

சென்னை சங்கமம்’ ஒத்திகை நிகழ்ச்சி’! நாட்டுப்புற கலைஞர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி கருணாநிதி எம்.பி

Social Vision
Last updated: 2025/01/07 at 2:42 AM
Social Vision
Share
3 Min Read
SHARE

‘சென்னை சங்கமம்’ ஒத்திகை நிகழ்ச்சி’! நாட்டுப்புற கலைஞர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி கருணாநிதி எம்.பி

தமிழர் திருநாளாம் தைத் திங்கள் பொங்கல் விழாவினையொட்டி, தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நடத்தும் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி சென்னையில் வரும் 13ம் தேதி தொடங்கி ஜனவரி 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட கிராமியக் கலைஞர்கள் இணைந்து சென்னையில் மாநகராட்சி விளையாட்டுத்திடல் மற்றும் பூங்கா உள்ளிட்ட பல இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றனர்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் இந்த விழா நடைபெற உள்ள நிலையில், நேற்று (06/01/2025) சென்னை அடையார் இசைக் கல்லூரியில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியை கனிமொழி கருணாநிதி நேரில் கண்டு மகிழ்ந்ததுடன், நாட்டுப்புற கலைஞர்களுடன் கலந்துரையாடினார்.

சென்னையில், தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற பிரம்மாண்ட கலைவிழா கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் சங்கமம் கலை நிகழ்ச்சிகளை சென்னையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (13/01/2025) அன்று கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத் திடலில் தொடங்கி வைக்கிறார்கள். சங்கமம் கலை நிகழ்ச்சிகள் (17/01/2025) வரை தொடர்ந்து 4 நாட்கள் சென்னை மாநகரின் முக்கியமான 18 இடங்களில் நடைபெறுகின்றன. இந்த விழா, கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் நடைபெற்றது.

இதையும் படிங்க

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”
 மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் 
என்மீது ஒரு பழி உண்டு  -அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. – கவிஞர் வைரமுத்து 

தமிழ்நாடு முதலமைச்சர் (13/01/2025) அன்று மாலை 6.00 மணியளவில் கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத் திடலில் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் முன்னணி கலைஞர்களுடன் 200 கிராமிய கலைஞர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் வெகுசிறப்பாக நடைபெறும்.

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சென்னை இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா வளாகம், சைதாப்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் விளையாட்டு மைதானம், எழும்பூர் அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சித் திடல், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் (14/01/2025) முதல் (17/01/2025) வரை நான்கு நாட்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கலைவிழா நடைபெற உள்ளது.

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் சென்னையின் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்கள் ஆகியோரும் கலை நிகழ்ச்சி வழங்க உள்ளார்கள்.

இவற்றுடன் மகாராஷ்டிராவின் லாவணி, ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் துர்சி நிருத்தியா, கோவாவின் விளக்கு நடனம், மிசோராம் மூங்கில் நடனம் ஆகியவைகளும் நடைபெற உள்ளன.

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் வெளிப்படுத்தும் நமது நாட்டுப்புறக் கலை வடிவங்களைப் பெருநகர சென்னைவாழ் பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாகவும், பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்பெறும் பொருட்டும் இவ்விழா சென்னை மாநகரில் நடத்தப்படுகிறது. இவ்விழா நடைபெறும் நாட்களில் அனைத்து இடங்களிலும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெறும் வகையில் உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGGED: சென்னை சங்கமம்' ஒத்திகை நிகழ்ச்சி'! நாட்டுப்புற கலைஞர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி கருணாநிதி எம்.பி
Social Vision January 7, 2025 January 7, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்.

February 16, 2024
மாவட்டங்கள்

அரசு தொடக்கப்பள்ளி சுற்றுசுவர் அமைக்கும் பணியை, வே.சம்பத்குமார் எல்எல்ஏ,தொடக்கிவைத்தார்.

February 26, 2024
தமிழ்நாடு

முள்ளங்கி விலை சரிவால் விவசாயிகள் கவலை

March 4, 2025
மாவட்டங்கள்

திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு சிபிஐ(எம்.எல்) தலைவர்கள் வாழ்த்து 

March 27, 2024
நகை திருட்டு
குற்றம்

மருத்துவமனை ஊழியர் வீட்டில் நகை திருட்டு

February 12, 2024
பென்னாகரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை இரண்டாம் கலந்தாய்வு
கல்வி & வேலைவாய்ப்பு

பென்னாகரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை இரண்டாம் கலந்தாய்வு

June 21, 2024

மேலும் படிங்க

இந்தியாசினிமா

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

November 5, 2025
சினிமா

 மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் 

October 25, 2025
சினிமா

என்மீது ஒரு பழி உண்டு  -அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. – கவிஞர் வைரமுத்து 

June 19, 2025
சினிமா

நடிகர் மனோஜ் குமார் மறைவு; கவிஞர் வைரமுத்து இரங்கல் 

March 26, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?