பாலக்கோடு திமுக அரசை கண்டித்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் ,மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குமார் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில் அண்ணா பல்கலைகழத்தில் நடந்த மாணவி வன்கொடுமை ,பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் ,பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வற்புறுத்தியும் , மழை நிவாரண தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை கோரியும் திமுக அரசை கண்டித்து இன்று 100-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் உதயகுமார், மாவட்ட பொருளாளர் டாக்டர் ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தினம், தெற்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், மற்றும் பெண்கள் உட்பட கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

