பாலக்கோடு சர்க்கரை ஆலையில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தருமபுரி எம்பி ஆ. மணி துவக்கி வைத்தார.
பாலக்கோடு சர்க்கரை ஆலையில் சுமார் 58 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் ஜெர்த்தலாவ் ஊராட்சியில் அமைந்துள்ள சர்க்கரை ஆலையின் உட்பகுதியில் விவசாயிகள் கரும்பு ஏற்றி வரும் டிராக்டர்கள் செல்ல இதுவரை இருந்த மண் சாலையை விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர் இதனால் மழைக்காலங்களில் டிராக்டர்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டு இருந்த நிலையில் தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் சுமார் 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1400 சதுர மீட்டர் பரப்பளவில் மண் சாலைக்கு பதில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது
இந் நிகழ்ச்சியில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி அவர்கள் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், வழக்கறிஞர் கோபால், இல.கிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

