மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சிந்துவெளி நாகரிகம் என்பது நம்முடைய திராவிடத் தன்மை கொண்ட நாகரிகம் : தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > சிந்துவெளி நாகரிகம் என்பது நம்முடைய திராவிடத் தன்மை கொண்ட நாகரிகம் : தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாடுதொல்லியல்

சிந்துவெளி நாகரிகம் என்பது நம்முடைய திராவிடத் தன்மை கொண்ட நாகரிகம் : தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

Social Vision
Last updated: 2025/01/05 at 9:11 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

சிந்துவெளி நாகரிகம் என்பது நம்முடைய திராவிடத் தன்மை கொண்ட நாகரிகம் : தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இந்தியத் தொல்லியல் அகழாய்வின் மூலம் திராவிடப் பண்பாட்டை உலகறியச் செய்த ஜான் மார்ஷல் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து ‘சிந்துவெளி வரிவடிவங்களும், தமிழ்நாட்டுக் குறியீடுகளும் – ஒரு வடிவாளியல் ஆய்வு” என்ற நூலை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், சிந்துவெளி நாகரிகம், மொகஞ்சதாரோ, ஹரப்பா என்ற இந்த மூன்று சொற்களும் எல்லோருடைய பள்ளி நாட்களிலும் நிச்சயமாக இடம்பெற்றிருக்கும். இந்த நாகரிகத்தில் இடம்பெற்ற திமிலுடைய காளையும், நீண்ட கட்டட அமைப்புகளும், நீர்நிலைகளும் நம்முடைய குழந்தைகால நினைவு குறிப்புகளில் என்றென்றைக்கும் பதிந்திருக்கக் கூடிய வடிவங்களாக அமைந்துள்ளன.

சிந்து சமவெளி நாகரிகம் ஒரு புதினமா அல்லது புதிரா என்ற கேள்வி எப்போதும் எனக்குள் எழுந்து கொண்டே இருக்கும். சிந்துவெளி நாகரிகம் என்பது நன்கு வளர்ந்த ஒரு எழுத்து முறையைக் கொண்டிருக்கக் கூடிய நாகரிகம். ஏனெனில் மிகக் குறுகிய அளவில் முத்திரை வடிவில் எழுதப்பட்டுள்ளதால் இன்றளவும் அதனை படிப்பதில் உள்ள சிரமங்களை ஆய்வாளர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்த நாகரிகத்தினுடைய எழுத்து முறையை இன்னும் முழுமையாக படிக்க முடியாத காரணத்தால் இன்றைக்கும் ஒரு புதிராக இருக்கக்கூடிய நிலை இருக்கிறது. இந்த புதிரை விடுவிக்க கூடிய தொடர் முயற்சியில் ஆய்வாளர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சிந்துவெளி நாகரிகம் என்பது நம்முடைய திராவிடத் தன்மை கொண்ட நாகரிகம். எனவே தான் இதனை முற்றிலுமாக அறிந்து கொள்ளும் வகையில் நம்முடைய முதல்வர் தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிக்காக மட்டும் ஐந்து கோடி ரூபாயை ஒதுக்கி தந்துள்ளார். இந்திய வரலாற்றில் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு என்று 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த ஒரே முதலமைச்சர் நம்முடைய முதல்வர்.

நமது திராவிட மாடல் அரசு மேற்கொண்டுள்ள அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கிடைத்திருக்கக் கூடிய குறியீடுகள் சிந்துவெளி பண்பாட்டில் இருக்கக்கூடிய எழுத்து முறை குறியீடுகளுக்கு ஒத்திருக்கிறது. மேலும், திராவிடத்திற்கும் சிந்துவெளிக்கும் இருக்கக்கூடிய நாகரிகங்களை நமது தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள், குறியீடுகள் மற்றும் இலக்கியம் என்ற மூன்று வகையில் சொல்ல முடியும். இந்த மூன்றிலும் சிந்து வெளியுடன் தொடர்புடைய நாகரிகம் திராவிட நாகரிகம்.

அதே காலகட்டத்தில் கங்கை சமவெளியில் இருக்கக்கூடிய பானை ஓடுகளில் இருக்கக்கூடிய குறியீடுகள் சிந்துவெளி நாகரிகத்துடன் ஒத்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வரலாறு பற்றிய தகவல்களை நாம் அறிவியல் பூர்வமாக தான் அணுக வேண்டும். அந்தவகையில் இந்த ஆய்வுகளும், கருத்தரங்கமும் மிக முக்கியமான ஒரு இடத்தை பெற்று இருக்கிறது‌. வரலாற்றை அறிவியல்பூர்வமாக அணுகும் வாய்ப்பை இந்த கருத்தரங்கம் நமக்கு வழங்கியிருக்கிறது எனக்கூறினார்.

TAGGED: சிந்துவெளி நாகரிகம் என்பது நம்முடைய திராவிடத் தன்மை கொண்ட நாகரிகம் : தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
Social Vision January 5, 2025 January 5, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

ஈரான் அதிபர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்கா இஸ்ரேல்  பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தமுமுக அமைதி ஆர்ப்பாட்டம்  

March 1, 2026
அரசு நல திட்டம்

கரும்பு விவசாயிகள் ஜூன் 30.–க்குள் தங்களது கரும்பினை ஆலைக்கு பதிவு செய்துகொள்ள வேண்டுகோள்

June 20, 2024
AITUC
தமிழ்நாடு

பழைய பென்சின் திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்.

February 6, 2024
அரசியல்

சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் நிதியை அள்ளி, அள்ளி கொடுக்கும் ஒன்றிய அரசு, தமிழுக்கு கிள்ளி கூட கொடுப்பதில்லை: கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

February 16, 2024
தமிழ்நாடு

காந்தியடிகளின் 157 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருச்சிலைக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மலர் தூவி மரியாதை

October 2, 2025
ஆரோக்கியம்

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்  ஆட்சியர் கி.சாந்தி, வழங்கினார். 

November 15, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.

August 18, 2026
தமிழ்நாடு

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

August 13, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2026
தொல்லியல்

தொழிலாளர், விவசாயிகள் விரோத மோடி அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் மறியல்

August 10, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?