மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் மணம் நிறைவடைந்த விவசாயி 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் மணம் நிறைவடைந்த விவசாயி 
அரசு நல திட்டம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் மணம் நிறைவடைந்த விவசாயி 

Social Vision
Last updated: 2024/12/28 at 7:06 AM
Social Vision
Share
4 Min Read
SHARE
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் மணம் நிறைவடைந்த விவசாயி 
தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 48 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி தெரிவித்துள்ளதாவது:
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை  உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள்.
இத்திட்டத்தின் கீழ் முக்கிய இனமாக தரிசு நில தொகுப்பு மேம்பாடு செயல்படுத்தப்படுகிறது.  10 முதல் 15 ஏக்கர் வரை தொடர்ச்சியாக உள்ள தரிசு நிலங்களை தேர்வு செய்து நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு, தரிசு நில தொகுப்புகளாக பதிவு செய்யப்படுகின்றன.  தேர்ந்தெடுக்கப்பட்ட தரிசு நில தொகுப்பில் ஆழ்துளை / திறந்தவெளி கிணறு அமைத்து நுண்ணீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படும் மர / பழ மரங்களின் நீர் தேவைக்கு ஏற்றவாறும், விவசாயிகளின் பாசன பரப்பிற்கு ஏற்றவாறும் நீர் பங்கீடு செய்யப்படுகிறது.
வேளாண்மைத்துறையின் மூலம் ஒன்றிய, மாநில நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இதர திட்டங்களை ஒருங்கிணைத்து 80 சதவீதம் திட்ட ஒதுக்கீட்டினை தேர்வு செய்யப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டகிராமபஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உழவர் நலன் சார்ந்த இதர துறைகளான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நீர்வளத்துறை, எரிசக்தித்துறை, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை ஆகிய துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் ஒருங்கிணைத்து செயல்பட்டு கிராமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 48 கிராம பஞ்சாயத்துகளில் செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் வேளாண்மை துறை திட்டங்களாக வரப்பு பயிராக பயிறுவகை விதைகள் 1920 எக்டருக்கு விநியோகம், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல்விளகங்களின் வாயிலாக 1150 எக்டருக்கு உயிர் உரங்கள், உயிரியல்கட்டுப்பாடுக் காரணிகள் மற்றும் நுண்ணூட்டப்பட்ட கலவை ஆகிய இடுபொருள்கள் விநியோகம் செய்யப்ப வழங்கப்பட்டுள்ளது.  292 எண்கள் விசை தெளிபான்கள்  50 சதம் மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது.  தனிப்பட்ட விவசாயிகளின்  தரிசு நிலத்தை விளைநிலமாக  மாற்றிட 160 எக்டருக்கு ரூ 15.36 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் இதர வேளாண் தொடர்பான திட்டங்கள் குறித்து விவசாயிகள் தொடர்புடைய வேளாண் விரிவாக்க மையங்களிலோ அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தினையோஅணுகிபயன்பெறகேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் .கி.சாந்தி தெரிவித்துள்ளார்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயனடைந்த தருமபுரி  மாவட்டம்,  நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மானியதள்ளி கிராமத்தில் வசித்துவரும் திரு.கி.கோவிந்தன் அவர்கள் தெரிவித்ததாவது,
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை அறிவித்தார்கள். இத்திட்டத்தின் கீழ் நாங்கள் இருக்கும் மானியதஅள்ளி கிராமத்தில் 16.29 ஏக்கர் கொண்ட தரிசு நிலத் தொகுப்பு கண்டறியப்பட்டு, எங்களது தொகுப்பில் 10 விவசாயிகள் உள்ளனர்.  இப்பகுதியில் நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு 800 அடி ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.  மேலும் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கத்தில் நுண்ணீர் பாசனக்கருவிகள் அமைக்கப்பட்டு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் எனது 1.57 ஏக்கரில் கொய்யா பழச்செடிகளும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  புன்செய் நிலமாக எங்கள் நிலமானது தற்போது போதிய நீர் வளம் பெற்று கொய்யா, எலுமிச்சை போன்ற பழச்செடிகளை சாகுபடி செய்யும் வகையில் உள்ளது. இதன் மூலம் போதிய வருமானமின்றி வறுமையில் இருந்த எங்களுக்கு அன்றாட தேவைகளை நிறைவேற்றி கொள்ளும் வகையில் போதிய வருமானம் கிடைத்து வருகின்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “மகசூல் பெருக்கம் – மகிழும் விவசாயி” என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தினார்கள். இத்திட்டதின் கீழ் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும் தன்னிறைவான கிராமத்தையும் உருவாக்குவதன் மூலம் என்னை போன்ற ஏழை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது நிறைந்தது மனம் என்று வேளாண் பெருகுடிகள் சார்பில் மனமார்ந்த நன்றியினைதெரிவித்துக்கொள்கிறோம் என கோவிந்தன்  மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.
TAGGED: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் மணம் நிறைவடைந்த விவசாயி
Social Vision December 28, 2024 December 28, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
#shortsfeed #shorts #shortvideo #breakingnews #shortsviral #neet #NEET #socialvisiontv
#shortsfeed #shortvideo #shortsviral #socialvisiontv #shorts
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

May 9, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

பாப்பிரெட்பட்டி அரசு கல்லூரியில், டிஜிட்டல் வேலைவாய்ப்பு குறித்து கருத்தரங்கம்.

February 9, 2024
தமிழ்நாடு

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா! ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனை நடத்திய கனிமொழி கருணாநிதி எம்.பி

November 14, 2025
ஆரோக்கியம்

பாலக்கோட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகள் இயங்க தடை , ரூபாய்.50000 அபராதம்.

December 12, 2024
மாவட்டங்கள்

தருமபுரி பாமக வேட்பாளர், செளமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்.

March 25, 2024
மாவட்டங்கள்

கள்ளச்சாரயத்தை தடுக்க தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

June 21, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?