மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாவட்டத்தில் 1,51,531 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > தருமபுரி மாவட்டத்தில் 1,51,531 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் 1,51,531 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

Social Vision
Last updated: 2024/12/27 at 10:29 AM
Social Vision
Share
4 Min Read
SHARE
தருமபுரி மாவட்டத்தில் 1,51,531 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,  தலைமையில்  நடைபெற்றது.
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றார்கள். வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
1,51,531 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி முதல் டிசம்பர்-2024 திங்கள் வரையிலான காலத்திற்கு இயல்பான மழையளவு 942.00 மி.மீ ஆகும். இந்த ஆண்டு தற்பொழுது வரை 850.32 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையில் 2024-2025ஆம் ஆண்டிற்கு 1,72,280 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறுவகைகள் உள்ளிட்ட உணவு தானியபயிர்கள் மற்றும் எண்ணெய்வித்துக்கள், பருத்தி, கரும்புசாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் தற்பொழுது வரை 1,51,531 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
விவசாயிகள் தேவையான விதைகளை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.
2024-ஆம் ஆண்டிற்கு நெல் வகைகளான ஆடுதுறை 39, நெல் ADT-53 ஆடுதுறை 54, CO-51, BPT 5204, TKM-13, வெள்ளைப்பொன்னி, VGD-1 ஆகியவை 19.624 மெ.டன் இருப்பும், சிறுதானியங்களான ராகி, சோளம், சாமை, கம்பு, மக்காச்சோளம் 81.182 மெ.டன் இருப்பும், பயறுவகைகளான துவரை, உளுந்து, பச்சைபயறு, காராமணி, கொள்ளு, கொண்டகடலை ஆகியவை 41.806 மெ.டன் இருப்பும், எண்ணெய்வித்துக்களில் நிலக்கடலை 42.87 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வேளாண் பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு இந்த 2024-2025ஆம் ஆண்டிற்கு 922.00 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதில், டிசம்பர் – 2024 திங்கள் வரை 512.42 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தேவையான விதைகளை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.
35,074 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன.
தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர (2024-25) உரத்தேவை 41,030 மெட்ரிக்டன் என கணக்கிடப்பட்டுள்ளது. 12,153 மெட்ரிக்டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ஜிங்க்பாக்டீரியா, பொட்டாஷ் மொபலிசிங்பாக்டீரியா, அசோஸ்பாஸ், ஜிங்க்சொலிபிலைசிங்பாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் 2024-2025ஆம் ஆண்டிற்கு 55,000 எண்ணிக்கைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு மாதம் முடிய 4,100 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. 35,074 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. உயிர் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். திருந்திய பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 6166 விவசாயிகள் 4875.43 ஏக்கர் பரப்பு பயிர் காப்பீடு செய்துள்ளனர். மேலும், தருமபுரி மாவட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் 2024-2025 ஆம் ஆண்டிற்கு 750.00 ஏக்கர் மல்பரி சாகுபடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு தற்பொழுது வரை 530.25 ஏக்கர் மல்பரி பயிரிடப்பட்டது.
38,432 விவசாயிகளுக்கு ரூ.383.52 கோடி பயிர் கடன்
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் கடந்த 30.11.2024 வரை நெல், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிட்ட 38,432 விவசாயிகளுக்கு ரூ.383.52 கோடி பயிர் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது வரை தருமபுரி மாவட்ட கூட்டுறவுசர்க்கரை ஆலையில் 6,504 குவிண்டாலும், கோபாலபுரம் சுப்பரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 24,722 குவிண்டாலும் சர்க்கரை இருப்பு உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பாரமரிப்புத்துறை, பட்டு வளர்ச்சி துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் மூலம் துறை வாரியான திட்ட விளக்க உரையாற்றப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்கள் மீது  உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசுத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வேளாண்மைத் துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு சரிவர எடுத்துச் சென்று அவர்களின் உற்பத்தியையும், வருமானத்தையும் அதிகரிக்கும் வகையில் வேளாண்மைத் துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கப் பெறுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என மாவட்டஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் எஸ்.மலர்விழி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ)  குணசேகரன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பி.அறிவழகன், அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
TAGGED: 51, 531 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது., தருமபுரி மாவட்டத்தில் 1
Social Vision December 27, 2024 December 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

தமிழகத்தில் தருமபுரி உட்பட 5 விடுதிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.

February 12, 2024
தமிழ்நாடு

மலபார்கோல்டு, டைமண்ட்ஸ் தருமபுரியில் தனது பிரம்மாண்டமான புதிய ஷோரூம் திறப்பு

October 4, 2025
சாதனையாளர்கள்

ஒலிம்பிக்பிக்கில் பங்கேற்று சாதிக்க துடிக்கும் மாற்றுத்திறனாளி கணேசன்

December 19, 2023
ஆரோக்கியம்

தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

October 23, 2025
அரசியல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு தொல். திருமாவளவன் எம்பி மலர் வளையம் வைத்து வீரவணக்கம்

December 27, 2024
சினிமா

நடிகர் மனோஜ் குமார் மறைவு; கவிஞர் வைரமுத்து இரங்கல் 

March 26, 2025

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
அரசு நல திட்டம்

பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.

August 10, 2026
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026
அரசு நல திட்டம்

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: செப்.17 முதல் விரிவாக்கம் – முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

June 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?