பென்னாகரம் அனைத்துமகளிர் காவல்நிலையத்தின் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் சார்பில் போக்சோ சட்டம் குறித்து விழப்புணவு நிகழ்சசி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் ஏ. இளவரசி, காவல் உதவி ஆய்வாளர் எம். தனம்மாள், மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் கலந்து கொண்டு , பெண் குழந்தைகள் பாலியல் பாலியல் சீண்டல்களில் இருந்து தற்காத்துக் கொள்வது, போக்சோ சட்டத்தின் விதிமுறைகள், இளம் வயதில் திருமணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள், சமூக வலைதளங்களை மாணவ- மாணவிகள் எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது, போதை பொருட்களை பயன்படுத்துவதால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, குற்ற செயல்களில் ஈடுபட தூண்டுவது உள்ளிட்ட தீமைகள் ஏற்படுகின்றன. என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாணவிகள், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

