மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: உலக நவீன வாசக்டமி இருவாரம் அனுசரிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > உலக நவீன வாசக்டமி இருவாரம் அனுசரிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி 
அரசு நல திட்டம்

உலக நவீன வாசக்டமி இருவாரம் அனுசரிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி 

Social Vision
Last updated: 2024/11/27 at 11:17 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
உலக நவீன வாசக்டமி இருவாரம் அனுசரிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி 
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்ப நலத் துறை சார்பில், உலக நவீன வாசக்டமி (NSV) இருவாரம் அனுசரிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி இரதத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (27.11.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி சிறப்பு முகாம்கள் 2024 நவம்பர் 21 முதல் தொடங்கி டிசம்பர் 04-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆண்களும் குடும்ப நலத்தில் பங்கேற்கும் பொருட்டு ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்த அரசால் இருவார விழிப்புணர்வு விழா ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு குடும்பநல துறையின் மூலம் தகவல் வழங்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு குடும்பநல ஆண் கருத்தடை முகாம்கள் நடத்திட மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாசக்டமி (NSV) செய்து கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1100/- வழங்கப்படும். நவீன வாசக்டமி எளிமையானது, பாதுகாப்பானது, தையலின்றி, தளும்பின்றி செய்யப்படுகிறது. கடின உழைப்புக்குத் தடை இல்லை. ஆண்மைக் குறைவு ஏற்படாது எனவும் மாவட்ட குடும்பநலச் செயலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டின் கருப்பொருள் “குடும்பக் கட்டுப்பாடு பற்றி இணைந்தே பேசுவோம் அதனை இன்றே தொடங்குவோம்” மேலும், விபரங்களுக்கு 73581 24022, 87784 74051 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ம.சாந்தி, துணை இயக்குநர் (தொழுநோய்) மரு. புவனேஸ்வரி , துணை இயக்குநர் (காசநோய்) மரு. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தொடர்புடைய மருத்துவர்கள், தருமபுரி மற்றும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், துறைசார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Social Vision November 27, 2024 November 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில்முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள், சந்திப்பு விழா

December 29, 2024
தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை தருமபுரி எம்பி நேரில் ஆய்வு

July 28, 2024
தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்.தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பங்கேற்பு.

November 29, 2024
அரசு நல திட்டம்

அரூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியர் 

June 19, 2024
தையல் பயிற்சி
அரசு நல திட்டம்

தமிழ்நாடு அரசின் இலவச நவீன தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்!

February 6, 2024
வேலைவாய்ப்பு

செவிலியர்கள் வெளிநாட்டில் பணிபுரிய வாய்ப்பு 

May 30, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.

February 4, 2026
அரசு நல திட்டம்

தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி

February 3, 2026
அரசு நல திட்டம்

கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

December 14, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர். ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

November 9, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?