மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மல்லுப்பட்டி அரசு பள்ளியில், உணவு பாதுகாப்பு துறையினர் புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > மல்லுப்பட்டி அரசு பள்ளியில், உணவு பாதுகாப்பு துறையினர் புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு.
ஆரோக்கியம்

மல்லுப்பட்டி அரசு பள்ளியில், உணவு பாதுகாப்பு துறையினர் புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு.

Social Vision
Last updated: 2024/11/22 at 5:25 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

மல்லுப்பட்டி அரசு பள்ளியில், உணவு பாதுகாப்பு துறையினர் புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, வழிகாட்டல் படி உணவு பாதுகாப்பு துறை சார்பாக,மல்லுப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புகையிலை பொருட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் மாதேசன், உதவி தலைமை ஆசிரியர் மாதேஷ் மற்றும் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி உள்ளிட்டோர் முன்னிலைவகித்தனர்.

காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால்  தலைமை உரையில்:  உணவு பொருள் பாக்கெட்கள், தின்பண்ட பாக்கெட்களில் காண வேண்டிய அம்சங்களான பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் எண், உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், நுகர்வோர் தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்கள் இருத்தல் அவசியம் என விழிப்புணர்வு செய்தார்.
மேலும் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், உபயோகிப்பதால் ஏற்படும் வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், காசநோய், மாரடைப்பு ,ஆண்மை குறைவு, மூளை செயலிழப்பு, ஆஸ்துமா, இருதய ரத்தக்குழாய் நோய், கால் விரல்களில் ஏற்படும் அழுகிய நிலை நோய்கள் குறித்து எடுத்துரைத்து இதன் காரணமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

இதையும் படிங்க

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 
நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 
தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

மாணவர்கள் அதனை கண்டிப்பாக தவிர்த்தல், தடுத்தல் அவசியம் என்றதுடன் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லீப், குட்கா போன்ற பொருள்கள் கடைகளில் விற்பனை கண்டாலோ, மறைத்து பதுக்கி விற்றாலோ ஆசிரியர்களுக்கு தகவல் அளித்தால், உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விழிப்புணர்வு செய்தார்.புகார் தெரிவிக்க வேண்டிய வாட்ஸ் அப் புகார் எண்.9444042322 தெரிவித்தார்.

நிகழ்வில் புகையிலைப் பொருட்கள் தடுப்பு சார்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. சுமார் 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.தமிழ் ஆசிரியர் தேவந்திரன் நன்றி கூறினார்.

பின்பு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், திருப்பதி உள்ளிட்ட குழுவினர் பள்ளி அருகாமை, பேருந்து நிறுத்தம் மற்றும் ராயக்கோட்டை சாலை மளிகை, பெட்டி,டீ கடைகள் மற்றும் வெள்ளிச் சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகளில் புகையிலை பொருட்கள்,காலாவதி பொருட்கள், குளிர்பானங்கள் ஆய்வு செய்தனர். விதிமுறை மீறிய, காலாவதி பொருட்கள் காணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு கடைகளுக்கு நியமன அலுவலர் உத்தரவின் பேரில் தலா ஆயிரம் வீதம் ரூ.2000 உடனடி அபராதம்விதித்தனர்.

TAGGED: உணவு பாதுகாப்பு துறையினர் ஞோதனை, மல்லுப்பட்டி அரசு பள்ளியில்
Social Vision November 22, 2024 November 22, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆய்வு
மாவட்டங்கள்

நியாயவிலை கடையில் பொருட்களின் தரம் குறித்து தருமபுரி மாவட்ட மாவட்ட ஆட்சியர் கி .சாந்தி ஆய்வு.

June 18, 2024
தருமபுரி இந்தியன் வங்கி
மாவட்டங்கள்

இந்தியன் வங்கி முன்பு திறந்து நிலையில் உள்ள பாதாளச்சாக்கடை குழியால் விபத்து ஏற்படும் ஆபத்து

June 18, 2024
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசியல்

எங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சியினரும் தாமரைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் :கே.பி.ராமலிங்கம்.

February 22, 2024
அரசு நல திட்டம்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பென்னாகரம் வட்டத்தில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்.

February 21, 2024
குற்றம்

சொகுசு காரில் கடத்தி வந்த 5 இலட்சம் மதிப்பிலான, 2டன் குட்கா பறிமுதல் போலீசார் அதிரடி

September 11, 2024

மேலும் படிங்க

ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025
ஆரோக்கியம்

தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

October 23, 2025
ஆரோக்கியம்

பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.

October 19, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?