மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மகப்பேறு மரணம் நடந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை ஆட்சியர் கி. சாந்தி உத்தரவு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > மகப்பேறு மரணம் நடந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை ஆட்சியர் கி. சாந்தி உத்தரவு 
குற்றம்தமிழ்நாடு

மகப்பேறு மரணம் நடந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை ஆட்சியர் கி. சாந்தி உத்தரவு 

Social Vision
Last updated: 2024/11/18 at 2:41 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
மகப்பேறு மரணம் நடந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை ஆட்சியர் கி. சாந்தி உத்தரவு 
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 45 மருத்துவமனைகள் மகப்பேறு சிகிச்சை (பிரசவம்) அளிக்கும் மருத்துவமனைகளான உள்ளன. மருத்துவமனைகளின் வசதிகளை பொறுத்து மூன்று வகைகளாக தரம் பிரித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
1. Level 1- மருத்துவமனை என்பது அடிப்படை வசதிகள் மற்றும் பிரசவ அறை உள்ள மருத்துவமனையாகும். இம்மருத்துவமனையில் High Risk தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்கக் கூடாது.
2. Level 2- பிரசவ அறை மற்றும் அறுவை அரங்கு உள்ள மருத்துவமனைகளாகும். இதில் இருதய பாதிப்பு, இரத்த அழுத்தம். வலிப்பு நோய், தீவிர நோய் தொற்று, உயர் சர்க்கரை அளவு, மயக்கநிலை, தீவிர நிமோனியா தொற்று, தீவிர டெங்கு காய்ச்சல், மஞ்சள் காமாலை, தீவிர சிகிச்சை பிரிவு (ICU) அனுமதிக்கும் தாய்மார்கள் மற்றும் பிற தீவிர தொற்று ஏற்படும் தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்கக் கூடாது.
3. Level 3- பிரசவ அறை, அறுவை அரங்கு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (ICU) உள்ள மருத்துவமனையாகும். இதில் அனைத்து விதமான நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கலாம்.
நமது மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2024 முதல் ஜீலை 2024 வரை மகப்பேறு மரணங்கள் எதுவும் நிகழவில்லை. ஆகஸ்ட் 2024-ம் மாதத்தில் 2, செப்டம்பர் 2024-ம் மாதத்தில் 2. அக்டோபர் 2024-ம் மாதத்தில் 2, நவம்பர் 2024-ம் மாதத்தில் 1 என மகப்பேறு மரணங்கள் நடந்துள்ளது. எனவே, மகப்பேறு மரணங்கள் நிகழாமல் தடுக்க மருத்துவமனைகளுக்கு கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது
Low Risk -ல் இருந்து High Risk-க்கு மாறும் தாய்மார்களை உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அவசர ஊர்தியின் மூலம் அனுப்பப்பட வேண்டும். அவ்வாறு பரிந்துரை செய்து அனுப்பப்பட்ட தாய்மார்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? என்பதை உறுதி செய்ய வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட தாய்மார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் PICME PORTAL-ல் Entry போட வேண்டும். பிறகு Whatsapp Group-ல் பதிவிட வேண்டும். மாதந்தோறும் 50 பிரசவத்திற்கு மேல் பார்க்கப்படும் மருத்துவனைகளில் Blood Storage Centre அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் 24 மணிநேரமும் இயங்கிவரும் மகப்பேறு மருத்துவமனைகளில் ஒரு மகப்பேறு பணிமருத்துவர் கட்டாயமாக பணியில் இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மகப்பேறு மரணங்கள் ஏற்பட்டால் தமிழ்நாடு மருத்துவமனைகள் முறைப்படுத்துதல் சட்டத்தின் (Tamil Nadu Clinical Establishment Act ) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
சென்ற வாரம் தருமபுரி மாவட்டத்தில் மகப்பேறு மரணம் நிகழ்ந்த மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதன் பிறகு. அம்மருத்துவமனையின் தரம் Level 3 -ல் இருந்து Level 2 ஆக தரவிறக்கம் செய்யப்படுகிறது. இனிவரும் காலங்களில் அம்மருத்துவமனையில் Complicated High Risk தாய்மார்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கக்கூடாது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,  உத்தரவின்பேரில் அறிவுறுத்தப்படுகிறது.
TAGGED: மகப்பேறு மரணம் நடந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை ஆட்சியர் கி. சாந்தி உத்தரவு
Social Vision November 18, 2024 November 18, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

Uncategorized

கிராம பகுதிகளில்  மினி பேருந்து வழித்தடங்களை அதிகமாக அமைக்க நடவடிக்கை அமைச்சர் சிவசங்கர்

June 29, 2024
தமிழ்நாடுவிளையாட்டு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக்கோரிக்கை: 100 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமனம்.

June 27, 2024
இந்தியா

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரிப்பு 

May 18, 2025
தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த புள்ளிமானை உயிருடன் மீட்ட வனத்துறையினர்.

June 29, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டிற்கு புதியதாக 5 மருத்துவக்கல்லூரி திறக்க மத்திய அரசு அனுமதி 

July 8, 2024
ஒன்றிய அரசு தொலைக்காட்சியில் காவி மயமா? என்பதை கண்டித்து சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தியா

அரசு தொலைக்காட்சியின் காவிமயமாக்கலைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகம் சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

April 29, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடு

புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

August 28, 2026
தமிழ்நாடு

அடமான மோசடிகளைத் தடுக்க புதிய நடவடிக்கைவில்லங்கச் சான்றிதழில் அடமான பதிவு விவரத்தை உறுதி செய்த பின்னரே கடன் தொகை 

August 27, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?