மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்  ஆட்சியர் கி.சாந்தி, வழங்கினார். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்  ஆட்சியர் கி.சாந்தி, வழங்கினார். 
ஆரோக்கியம்

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்  ஆட்சியர் கி.சாந்தி, வழங்கினார். 

Social Vision
Last updated: 2024/11/15 at 1:26 PM
Social Vision
Share
4 Min Read
SHARE
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்  ஆட்சியர் கி.சாந்தி, வழங்கினார். 
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை மாநில அளவில் இன்று (15.11.2024) தொடங்கி வைத்து, “ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத வலிமையான தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” மக்கள் பிரதிநிதிகளை அன்புடன் கேட்டுக்கொண்டார்.
இதனைதொடர்ந்து, தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், இலக்கியம்பட்டி அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில்  ”ஊட்டச்சத்தை உறுதி செய்” இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் விதமாக ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் முன்னிலையில் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி தெரிவித்ததாவது:
“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ் 0-6 மாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே மகத்தான உணவாக, திட உணவு வேறு ஏதுமின்றி வழங்கப்படுவதால் தாய்மார்கள் ஆரோக்கியத்துடன் சிறந்த முறையில் தாய்ப்பால் புகட்டி ஊட்டச்சத்து குறைபாடில்லாத குழந்தைகளை உருவாக்கிட, பச்சிளம் குழந்தைகள் மீதான தனித்துவமான அக்கறையின் அடிப்படையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டம் முதற்கட்டமாக 2022 ம்  ஆண்டுகொண்டுவரப்பட்டது.“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2022ம்  ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் 307 கடுமையான மற்றும்  430 மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய 0-6 மாதங்களுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு மொத்தம் 1044 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
தற்போது இரண்டம் கட்டமாக 2024-2025 நிதியாண்டில் தருமபுரி மாவட்டத்திற்கு ரூ.52,75,642 (ஒரு பெட்டகம் ரூ.2265) மதிப்பீட்டில் 2329 ஊட்டச்சத்து பெட்டகம் வரப்பெற்றுள்ளது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 0-6 மாதங்களுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு  2 ஊட்டச்சத்து பெட்டகமும் மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு 1 ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட உள்ளது.
ஊட்டச்சத்து பெட்டகத்தில் IFA Syrup – 3 எண்ணிக்கை, பேரிச்சம்பழம் – 1 கி.கி, Protein Pro PL – 1 கி.கி, Cup – 1, துண்டு -1, ஆவின் நெய்-500 கிராம், Albendazole table- 1 ஆகிய பொருட்கள் உள்ளது.தருமபுரி மாவட்டத்தில், இலக்கியம்பட்டி அங்கன்வாடி மையத்தில்உள்ள416 பயனாளிகளுக்கு  ஊட்டச்சத்து பெட்டகம் மாவட்ட அளவிலான துவக்க விழாவில் வழங்கப்பட்டுள்ளது . இதனை தொடர்ந்து வட்டார அளவில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மக்கள் பிரதிநிதகள் மூலம் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதற்கு முன்னதாக அனைத்து குழந்தைகளுக்கும் (0-6 MONTHS) எடை , உயரம் அளவிடப்பட்டு TN ICDS –APP ல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய 15 நாட்களுக்கு பின்னர் ஊட்டச்சத்தின் முன்னேற்ற நிலையினை அறிய மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்களால் குழந்தைகளின் எடை, உயரம் அளவிடப்பட்டு TN ICDS –APP ல் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படும்.
குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் தான், ஆரோக்கியமான மனநிலை குழந்தைகளுக்கு வரும். ஆரோக்கியமான, செயல்பாடுகள் இருக்கும், உடல் ஆரோக்கியமே குழந்தைகளின் ஆரோக்கியமான மனநிலைக்கும், ஆரோக்கியமான செயல்பாடுகளுக்கும் முக்கியம் என்ற எண்ணத்தை மனதில் வளர்த்துக்கொள்ள வேண்டும்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளிக்கும் உணவில் ஊட்டசத்து பெட்டகத்தில் உள்ள டேட்சிரப், நெய், சிவப்பு அவல், வெல்லம் போன்ற ஊட்டச்சத்து பொருட்களுடன் காய்கறிகள், பருப்பு மற்றும் கீரை வகைகளை சேர்த்து கொடுக்கலாம்.
இந்த ஊட்டச்சத்து பொருட்களை தொடர்ந்து குழந்தைகளுக்கு தருவதால், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும். கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 6 மாதம் முதல் 2 வருட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 60 கிராம்  மற்றும் 2 வயது முதல் 6 வயது குழந்தைகளுக்கு 30 கிராம்  செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டு வருகிறது.அங்கன்வாடி மையத்தில் முன்பருவகல்வி குழந்தைகளுக்கு மதிய உணவுடன் வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது.
எனவே பெற்றோர்கள் கர்ப்பிணி பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்த நல்ல ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு முறையாக சென்று எடை, உயரம் கணக்கிடுதல் வேண்டும். ஊட்டச்சத்து உணவினை  முறையாக உட்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.சாந்தி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் ச.பவித்ரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்யா, கலைவாணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பெற்றோர்கள், அங்கன்வாடி குழந்தைகள் கலந்துகொண்டனர்.
TAGGED: ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்  ஆட்சியர் கி.சாந்தி, வழங்கினார்.
Social Vision November 15, 2024 November 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortfeed #shortsviral #vcknews #nanguneri
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dhaapuri_Busstand
#shortvideo #shors #shortsfeed
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #mkstalin #dmk
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #breakingnews #elephant
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

அரூரில் கொங்கு வேளாளர்கள் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

April 28, 2024
மாவட்டங்கள்

குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் வேப்பிலை அள்ளி கிராம மக்கள், போராட்டம்.

March 2, 2024
உலகம்

சிட்டுக்குருவி குறித்து சுவாரஸ்யமான தகவல்கள்

March 18, 2024
அரசு நல திட்டம்

முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு குண்டல்பட்டி பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருள் வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் 

March 1, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி தோட்டக்கலைத்துறையின் சார்பில் 18,258 பயனாளிகளுக்கு ரூ. 521.29 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல்

July 1, 2025
உலகம்புத்தகம் பேசினால்

புத்தகம் உருவானது எப்போது

January 9, 2024

மேலும் படிங்க

ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025
தமிழ்நாடு

தருமபுரி தூய்மை பணியாளர்களுக்கான கிராம சேவை செம்மல் விருது வழங்கும் விழா:மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், வழங்கினார்.

October 26, 2025
ஆரோக்கியம்

தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

October 23, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?