தருமபுரி தோழர் என். சங்கரையா முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
சுதந்திர வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரையா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் முன்னிட்டு தருமபுரி செங்கொடிபுரத்தில் அவரது உருவப் படத்துக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். மாரிமுத்து, எம். முத்து, எஸ். கிரைஸாமேரி மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. என். மல்லையன் கே. பூபதி ஒன்றிய செயலாளர் கே. கோவிந்தசாமி ஆகியோர் தோழர் என். சங்கரையா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி உரை நிகழ்த்தினர்.
பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம் வி. மாதன் , வி. இரவி, ஒன்றிய செயலாளர் பி. ஜீவானந்தம் மாவட்டக் குழு உறுப்பினர் கே. அன்பு ஆகியோர் பேசினர்.

