அரசு பணி தேர்வில் தேர்ச்சி பெறாத விரத்தியில் ஒரு குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கெரகோட அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன், இவரது மனைவி சுஜிதா (வயது29), இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நவீன் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இந்த நிலையில் சுஜிதா, எம் எஸ்சி பி எட் படித்துவிட்டு டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கு படித்து வருகிறார். நான்கு ஆண்டுகள் நடந்த தேர்வில் தேர்ச்சி பெறாததால் விரக்தியில் இருந்த சுஜிதா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

