தருமபுரியில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
தருமபுரியில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தருமபுரி நகர பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வர சத்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவானது கடந்த சனிக்கிழமை அன்று மங்கல இசையுடன் கணபதி ஹோமம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து விநாயகர் பூஜை இரண்டாம் கால யாக பூஜை தீபாரதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மூன்றாம் கால யாக பூஜை 108 மூலிகை ஹோமம் தீபாரதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க யாகசாலையில் வைத்து பூஜைக்கப்பட்ட கலச குடங்கள் கொண்டு ஸ்ரீ வரசத்தி விநாயகர் மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது அதனைத் தொடர்ந்து புனித நீரை பக்தர்களுக்கு தீர்த்தமாக தெளிக்கப்பட்டது பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

