மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் 6 ம் ஆண்டு புத்தக்த்திருவிழா அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செலவம் துவக்கிவைத்தார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > புத்தகம் பேசினால் > தருமபுரியில் 6 ம் ஆண்டு புத்தக்த்திருவிழா அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செலவம் துவக்கிவைத்தார்.
புத்தகம் பேசினால்

தருமபுரியில் 6 ம் ஆண்டு புத்தக்த்திருவிழா அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செலவம் துவக்கிவைத்தார்.

Social Vision
Last updated: 2024/10/04 at 3:10 PM
Social Vision
Share
4 Min Read
SHARE
தருமபுரியில் 6 ம் ஆண்டு புத்தக்த்திருவிழா அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செலவம் துவக்கிவைத்தார்.
தருமபுரி மாவட்டம், மதுராபாய் சுந்தரராஜ்ராவ் திருமண மண்டபத்தில் தருமபுரி தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து நடத்தும் 6-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவினை (2024)  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் .எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (04.10.2024) மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கிவைத்து, இப்புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த புத்தக அரங்குகளை பார்வையிட்டார்.
பின்னர்  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்டந்தோறும் புத்தக திருவிழாக்களை நடத்தி, புத்தக வாசிப்பை அதிகரிக்க செய்ய வேண்டுமென ஆணையிட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து, மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் புத்தக வாசிப்பு, அறிவை பெருக்கும் வகையிலான இப்புத்தகத் திருவிழாக்கள் மாவட்டங்கள்தோறும் நடத்திட தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து, புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தருமபுரி மாவட்டத்தில் இப்புத்தக திருவிழா நடத்திட அரசின் சார்பில் ரூ.20.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் நூலக வாசிப்பு பழக்கத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்த அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளும் ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, நூலகம் அமைக்கப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க, தருமபுரி மாவட்டத்தில் 6-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா இன்று (04.10.2024) முதல் 13.10.2024 வரை 10 நாட்கள் நடைபெறுகின்றது. பொதுமக்கள் கலந்துகொள்கின்ற பொதுநிகழ்வான இப்புத்தக திருவிழாவில் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இப்புத்தக திருவிழாவில் 60க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ரூபாய் ஒரு கோடியே 50 இலட்சம் மதிப்பில் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக திருவிழாவில் 60 ஆயிரம் நபர்கள் கலந்துகொண்டு ரூபாய் 1 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாசிப்பின் முக்கியத்துவம் பற்றியும், பெண்கல்வி பற்றியும், சமூகம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனைச் சார்ந்து, போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்குப் புத்தகத் திருவிழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
நாம் அனைவரும் தினம் தினம் ஏதாவது ஒன்றை புதிது புதிதாக கற்றுக் கொள்கிறோம். கற்றலில் பல வகை இருப்பினும் புத்தக வாசிப்பின் மூலம் கற்றுக்கொள்ளுதல் என்பது மிக முக்கியமானது. பல நூல்களைப் படிப்பதன் மூலம் சிறந்த அனுபவத்தை பெறுவதொடு, உயர்ந்த அறிவை நம்மால் பெற முடியும். மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் சிறப்பான   வாழ்க்கைக்கும்,  சிறந்த வளர்ச்சிக்கும் கல்வி மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து,  கட்டாயம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திகொண்டு, நன்றாக கல்வியினை கற்க வேண்டும். நாம் ஒரு புத்தகத்தை படித்து விட்டால், அடுத்தடுத்து தொடர்ந்து புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு விடும்.
நாம் நம் வாழ்க்கையில் மிகச்சிறந்த உயரத்திற்கு செல்ல வேண்டுமானால் புத்தகவாசிப்பை தினந்தோறும் பின்பற்றி கற்றல் வேண்டும். இந்த புத்தகத் திருவிழா இலட்சக்கணக்கான நல்ல புத்தகங்களை ஒரே இடத்தில் பெறுவதற்கான அருமையான வாய்ப்பாகும். தமிழ்நாடு அரசு உருவாக்கி தந்திருக்கின்ற இந்த பெரிய வாய்ப்பை அனைவரும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்து அரங்குகளை பார்வையிட்டு சென்று விடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், புத்தகங்களை வாங்கி சென்று, புத்தக வாசிப்பு மேற்கொண்டு மிகச் சிறந்த ஆளுமை மிக்க மனிதராக வாழ்வில் முன்னேறுவதோடு, அறிவை பெருக்கி கொள்ள  வேண்டும். இவ்வாறு  வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து, மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 1 இலட்சம் மதிப்பிலான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை அதியமான்கோட்டை மற்றும் அரூர் ஆகிய 2 நூலகங்களில் போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் பயில்வதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினார்.
தருமபுரி புத்தக திருவிழாவை முன்னிட்டு பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் பேச்சுபோட்டிகளில் வெற்றி பெற்ற 30 மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் .எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் புத்தகப்பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், இப்புத்தக திருவிழாவில் தீராப்பெருவெளி மற்றும் விடுதலைபோரில் தருமபுரி ஆகிய 2 புத்தகங்களை வெளியிட்டார்.
இந்நிகழ்வுகளின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார்,மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல பொதுமேலாளர் செல்வம், தருமபுரி தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் மரு.இரா.செந்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம், தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான்மாது, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், வட்டாட்சியர் சண்முகசுந்தரம் மாவட்ட நூலக அலுவலர் அர.கோகிலவாணி கைம்பெண் நலவாரிய உறுப்பினர் ரேணுகாதேவி, தகடூர் புத்தகப் பேரவை தலைவர் இரா.சிசுபாலன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
TAGGED: தருமபுரியில் 6 ம் ஆண்டு புத்தக்த்திருவிழா அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செலவம் துவக்கிவைத்தார்.
Social Vision October 4, 2024 October 4, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கையெழுத்து இயக்கம்
Uncategorizedமாவட்டங்கள்

100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்க விழிப்புணர்வு

March 21, 2024
மாவட்டங்கள்

தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.மணி.

March 24, 2024
மாவட்டங்கள்

அரூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

April 27, 2024
தமிழ்நாடு

356 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் : குழந்தை திருமணம் நடைபெற்றதாக 80 பேர் மீது வழக்கு பதிவு 

September 30, 2024
அரசியல்

தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பபெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

July 24, 2024
தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி கருணாநிதி எம்.பி

March 1, 2025

மேலும் படிங்க

புத்தகம் பேசினால்

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்

October 2, 2025
தமிழ்நாடுபுத்தகம் பேசினால்

கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.

September 30, 2025
புத்தகம் பேசினால்

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

December 27, 2024
குழந்தைகள் உலகம்புத்தகம் பேசினால்

நூலாசிரியருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி 

November 18, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?