மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது ஆட்சியர் எச்சரிக்கை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது ஆட்சியர் எச்சரிக்கை
குற்றம்

கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது ஆட்சியர் எச்சரிக்கை

Social Vision
Last updated: 2024/10/01 at 2:04 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது ஆட்சியர் எச்சரிக்கை
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கண்காணித்தல், ஒழித்தல் (Illicit Arrack) மற்றும் போதைப்பொருட்கள்,  தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள்  ஒழித்தல்  (NCORD)  தொடர்பாக காவல்துறை, வருவாய்த்துறை, மதுவிலக்கு அமல் பிரிவு (Enforcement Wing),  தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், மருத்துவத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் வனத்துறை அலுவலர்களுடனான வாராந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் அக்- 1  நடைபெற்றது.    இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்தத் தொழிலிலிருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கிட சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் மூலமாக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கள்ளச்சாரயத்தை முற்றிலும் ஒழித்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குட்கா போன்ற போதை பொருட்கள் பயன்பாடு குறித்து தணிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருட்களின் பாதிப்புகள் குறித்தும், போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு முழுமையாக ஏற்படுத்திட வேண்டும். போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, உறுதியேற்றிருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருளுக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காவல்துறையுடன் இணைந்து நடத்திட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்தல், போதைப்பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட அனைத்து துறை அலுவலர்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ்.எஸ். மகேஸ்வரன், உதவி ஆணையர் (ஆயம்) நர்மதா, மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) மகேஸ்வரி, வட்டாட்சியர்கள் உட்பட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
TAGGED: கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது
Social Vision October 1, 2024 October 1, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற பிப்-29.ல் நடைபெற உள்ளது.

February 26, 2024
திராவிடம்
புத்தகம் பேசினால்

நூல் ஆய்வு : நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்

June 8, 2024
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த விசிக, எம்எல்ஏக்கள்.

February 22, 2024
இந்தியாசுற்றுலா

கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு

November 14, 2024
மாவட்டங்கள்

பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி போர்வெல் தொழிலாளி உயிரிழப்பு

April 15, 2025
சினிமா

நன்றி தெரிவித்த சூரி உலக அரங்கில் கொட்டுக்காளி!

February 17, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?