மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் ,நடமாடும் உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > தருமபுரியில் ,நடமாடும் உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி.
ஆரோக்கியம்

தருமபுரியில் ,நடமாடும் உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி.

Social Vision
Last updated: 2024/09/30 at 6:48 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

தருமபுரியில் ,நடமாடும் உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி.

தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக நடமாடும் மற்றும் சாலையோர சிற்றுண்டி ,பானிபூரி, துரித உணவு (பாஸ்ட் புட்) ,கூழ் வண்டி, மீன் வறுவல் ,சில்லி சிக்கன், சிப்ஸ்,பழங்கள் உள்ளிட்ட உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் தருமபுரி ஸ்ரீராமா போர்டிங் கே.ஆர்.கே சுந்தரமஹால் அரங்கில் நடைபெற்றது.தருமபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் வரவேற்றார். ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், கந்தசாமி,அருண், திருப்பதி,மற்றும் சரண் முன்னிலை வகித்தனர். உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா,  தலைமையில் இந்திய உணவு பாதுகாப்பு தரநிர்ணய ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற பயிற்சி பார்ட்னர் ‘நோ புட் வேஸ்ட்’ பயிற்றுனர் கோகிலம், நிகழ்வில் பங்கேற்ற உணவு வணிகர்களுக்கு பயிற்றுவித்தார் . இதில் தர்மபுரி, பாலக்கோடு, காரிமங்கலம் மொரப்பூர், கடத்தூர், கம்பைநல்லூர், திப்பம்பட்டி , நல்லம்பள்ளி , பொம்மிடி, அரூர் என மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட நடமாடும் உணவு வணிகர்கள் இரு பிரிவுகளாக பங்கேற்றனர்.

உணவு பாதுகாப்புதுறை அங்கீகாரம் பெற்ற பயிற்சி பார்ட்னர் நோ புட் வேஸ்ட்’ அமைப்பின் பயிற்றுனர் கோகிலம் நடமாடும் உணவு வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தன்சுத்தம் ,சுற்றுப்புற சுத்தம் ,பொருள் மேலாண்மை, பொருட்கள் வாங்குதல், இருப்பு வைத்தல், தயார் செய்தல், கையாளுதல், பரிமாறுதல், மேலும் பூச்சிகள் கட்டுபாடு, நான்கு விதமான பொருட்கள் கெடுவதற்கான சூழ்நிலைகள் தவிர்த்தல் (4D), குடிநீர் தன்மை, உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய விவரங்கள் குறித்தும் , குளிர் பதன பெட்டிகளில் பால் பொருட்கள் மற்றும் இறைச்சிகள் வைத்திருக்க வேண்டிய குளிர்நிலை குறித்தும் தெளிவாக விளக்கினார் .

இதையும் படிங்க

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 
நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 
தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

மாவட்ட நியமன அலுவலர் மரு.பானு சுஜாதா, தலைமை உரையில் மாவட்டத்தில் உணவு வணிகர்கள் உணவு பொருள்களை சுத்தமாக, தரமானதாக தயார் செய்யவும், உணவினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கவும் இப் பயிற்சி உதவியாக இருக்கும் என்றார்.
மேலும் இனி நடமாடும் உணவு வணிகர்ளுக்கான உணவு பாதுகாப்பு சான்றிதழ் வருட கட்டணம் விலக்கு அளிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் வரை நடமாடும் உணவு வணிகர்கள் புதியது மற்றும் புதுப்பித்தல் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் . மாவட்டத்தில் அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம் எனவும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி
பொருள்களை தவிர்க்கவும் வலியுறுத்தினார்.

நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்நகோபால், உணவுப் பொருட்களில் வீட்டளவில் எளிய முறையில் கலப்படம் கண்டறிதல் செயல் விளக்கம், குறிப்பாக தேயிலை, தேன், சாயம் ஏற்றப்பட்ட பட்டாணி மற்றும் அயோடின் உப்பு, அயோடின் இல்லாத உப்பு வேறுபாடு குறித்து நேரடி செயல் விளக்கம் செய்து காட்டினார்.ஒரு முறை பயன்படுத்தி உபயோகப்படுத்திய சமையல் எண்ணெய் மறுபயன்பாட்டுக்கு உணவு பாதுகாப்பு துறை அங்கீகாரம் பெற்ற ரூகோ டீலர் அளித்து உரிய தொகை பெரும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு செய்தார்.நிகழ்வில் உணவக மற்றும் பேக்கரி சங்க செயலாளர் வேணுகோபால் பங்கேற்று நன்றி உரையாற்றினார்.

 

TAGGED: உணவு பாதுகாப்பு துறை சார்பாக நடமாடும் உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி. தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக நடமாடும் மற்றும் சாலையோர சிற்றுண்டி, கூழ் வண்டி, சிப்ஸ், சில்லி சிக்கன், தர்மபுரியில், துரித உணவு (பாஸ்ட் புட்), பானிபூரி, மீன் வறுவல்
Social Vision September 30, 2024 September 30, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortfeed #shortsviral #vcknews #nanguneri
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dhaapuri_Busstand
#shortvideo #shors #shortsfeed
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #mkstalin #dmk
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #breakingnews #elephant
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரியில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அவரது உரவசிலைக்கு  திமுகவினர் மாலை அணிவிப்பு

February 3, 2026
மாநில உரிமை காக்கும் ஆர்ப்பாட்டம்
மாவட்டங்கள்

மாநில உரிமை காக்கும் ஆர்ப்பாட்டத்தில் திமுக பெருந்திரளாக பங்கேற்க்க முடிவு.

February 5, 2024
அரசியல்

மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதால்தான் திமுக கூட்டணியை ஆதரிக்கிறேன் : கமலஹாசன்

March 24, 2024
புத்தகம் பேசினால்

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்

October 2, 2025
பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்க வேண்டும்
மாவட்டங்கள்

பெண்களை அடிமையாக, தீண்டாமையை ஆதரிக்கும் பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்கவேண்டும்: டி.ரவீந்திரன்

March 8, 2024
தமிழ்நாடு

சிறப்பு வாக்காளர் திருத்தத்தை ரத்து செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். 

October 31, 2025

மேலும் படிங்க

ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025
ஆரோக்கியம்

தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

October 23, 2025
ஆரோக்கியம்

பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.

October 19, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?