தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை
தந்தை பெரியார் பிறந்ததினத்தினை சமூகநீதி நாளாக தமிழ்மாநில மாநில விவசாய தொழிலாளர் சங்கம் தருமபுரியில் கடைபிடித்தனர், தருமபுரி பெரியார் மன்றத்தில் உள்ள தந்தை பெரியார் உருவ சிலைக்கு தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் ஜெ. பிரதாபன்,மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜி மாதையன்,அலமேலுஎத்துராஜ்,நல்லம்பள்ளி ஒன்றிய தலைவர் எல் .சி கிருஷ்ணன்,ஒன்றிய துணைச் செயலாளர் வெ .பை .மாதையன்,ஒன்றிய துணைத்தலைவர் ஜி. சம்பத், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வத்தல்மலை கோவிந்தன், வி செல்வம் நல்லம்பள்ளி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் ஏ பொன்மாரி மற்றும் நார்த்தம்பட்டி என். பி. ராஜி,கொத்தமல்லிகாரன் கொட்டாய் கோவிந்தராஜ் ஆகியவர்கள் கலந்துக் கொண்டு தந்தை பெரியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


