அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்தித்து, டேட்டா சென்டர் விரிவாக்கம், Global Capability Centre (GCC) மற்றும் AI திறன் முயற்சிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்த பேசினார்.


