பாலக்கோடு அருகே ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய மகாகும்பாபிஷேக விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொம்மநாயக்கனஅள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திர காளியம்மன் கோவில் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.இந்த விழாவானது நேற்று 21-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.
இன்று அதிகாலை முதலே கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹதி நடைப்பெற்றது.இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலசதீர்த்தம் மற்றும் பால் குடத்தை கோவில் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து திருக்குட நன்னீராட்டு மற்றும் தீபாரதனை காட்டினார். இதனையடுத்து மகாகும்பாபிஷேக கலச தீர்த்தமானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது ,அருள்மிகு முனியப்பன் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து பின்பு பூக்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காட்டப்பட்டது. அருள்மிகு பத்திர காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவில் பரமேஸ்வரன் மலை மண்டு தர்மகர்த்தா கோ.மாதப்பன் அவர்கள் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் வேங்கை கோவிந்தராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்

