மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சுகாதாரமற்ற குளிர்பான நிறுவனம் ஆய்வில் அதிர்ச்சி அடைந்த  உணவுபாதுகாப்புதுறை  அதிகாரிகள் அதிரடியாக கம்பெனியை மூட உத்தரவு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > சுகாதாரமற்ற குளிர்பான நிறுவனம் ஆய்வில் அதிர்ச்சி அடைந்த  உணவுபாதுகாப்புதுறை  அதிகாரிகள் அதிரடியாக கம்பெனியை மூட உத்தரவு.
ஆரோக்கியம்

சுகாதாரமற்ற குளிர்பான நிறுவனம் ஆய்வில் அதிர்ச்சி அடைந்த  உணவுபாதுகாப்புதுறை  அதிகாரிகள் அதிரடியாக கம்பெனியை மூட உத்தரவு.

Social Vision
Last updated: 2024/08/20 at 5:05 PM
Social Vision
Share
3 Min Read
SHARE
சுகாதாரமற்ற குளிர்பான நிறுவனம் ஆய்வில்அதிர்ச்சிஅடைந்த உணவு பாதுகாப்புதுறை  அதிகாரிகள் அதிரடியாக கம்பெனியை மூட உத்தரவு.
தமிழக முழுவதும் உள்ள உள்ளூர் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்து  குளிர்பானங்கள் தரம் அறிய மாதிரி சேகரித்து பகுப்பாய்வு அனுப்ப மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில்,  தருமபுரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, தலைமையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன் மற்றும் கந்தசாமி உள்ளிட்ட குழுவினர் தருமபுரி  நகராட்சி பாபா சாகிப் தெரு, ஏ.கொல்லள்ளி , அன்னசாகரம் ஆகிய பகுதிகளிலும்  மற்றும் தடங்கம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் உள்ளூர் குளிர் பான தயாரிப்பு நிறுவனங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் தயாரிப்பு நிறுவன  சுற்றுப்புறம் மற்றும் உபகரணங்கள், மூலப்பொருள்கள் , அடைக்கப்பட்ட குளிர்பான பெட்பாட்டில்களின், பாதாம் உள்ளிட்ட பால் பானங்கள்,கோலி சோடா பாட்டில்கள், உள்ளூர் கோலா, பன்னீர், ஆரஞ்சு பாட்டில்கள் தயாரிப்பு முறை, உபயோகப்படுத்தும் குடிநீர், மூலப் பொருட்கள் மூலப் பொருட்களில் காலாவதி தன்மை ஆகியவற்றுடன் தயாரித்த குளிர்பானங்களில் லேபில்கள், தயாரிப்பு தேதி, முடிவு தேதி, பேட்ச் எண் , உணவு பாதுகாப்பு உரிம எண் போன்ற விவரங்கள் உரிய முறையில் அச்சிடப்பட்டுள்ளனவா, தயாரிக்கும் இடம், தயாரித்த  குளிர்பானங்கள் இருப்பு,பராமரிப்பு, உபரி கழிவுகள் முறையாக வெளியேற்றம் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டது.
 ஆய்வில் தருமபுரி நகராட்சி பாபா சாகிப் தெரு மற்றும் ஏ.கொல்லள்ளியில் பகுதியில் உள்ள குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் நெருக்கடியான சுகாதாரமற்ற இடத்தில் குளிர்பானங்கள் தயாரிக்கப்படுவதும், தயாரித்த உள்ளூர் கோலா உள்ளிட்ட குளிர்பானங்களை பல்வேறு பிற கம்பெனி லேபிள்கள் உள்ள கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு தயாரித்து அனுப்பியதும், அனுப்ப இருப்பு வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது.
மேற்படி குளிர்பானங்களை அப்புறப்படுத்தி தங்களின் உணவு பாதுகாப்பு உரிம எண்ணுடன்  கூடிய தன் கம்பெனி லேபிள்கள், மூடிகளில்(கேப்-கார்க்) அச்சிட்டு தயாரித்து விற்பனைக்கு அனுப்ப எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும் இரு கம்பெனிகளும் குடியிருப்பு பகுதிகளில் உள்ளதால் அசம்பாவித நடைபெற வாய்ப்புள்ளதால் இடத்தை மாற்றவும் , உரிய  உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல் பின்பற்றி தயாரிப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டது. கோலிசோடாக்கள் மட்டும் தற்சமயம் விற்பனை செய்யவும் அதுவும் உரிய விபரங்கள் அச்சிடப்பட்டு பாட்டில்களில்  ஒட்டி விற்பனைக்கு அனுப்ப அனுமதிக்கப்பட்டது. பிற கம்பெனி  நிறுவனங்கள் பெயர் உள்ள, லேபிள் உள்ள குளிர்பானங்கள் கண்டிப்பாக விற்பனைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
ஏ. கொல்லள்ளி பகுதியில் இயங்கி வரும் சோடா கம்பெனி அறவே இயங்க தடை விதித்து, இடத்தை வேறு இடத்திற்கு மாற்றிய பின்  உணவு பாதுகாப்புத்துறை பார்வையிட்டு காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமம் பதிலாக புதிய உணவு பாதுகாப்பு உரிமம் விண்ணப்பித்து,  உரிய ஆய்வு ,அனுமதிக்குப்பின் குளிர்பானங்கள் விற்பனை செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு, கம்பெனி பூட்டி மூடப்பட்டது.
இதேபோல் தடங்கம், கலெக்டர் பங்களா  சாலையில் குமரகிரி மில் அருகில் இயங்கி வரும்  குளிர்பானங்கள் மற்றும் பாதாம் பால், உள்ளிட்ட ஆல்கஹால் அல்லாத குளிர்பான தயாரிப்பு நிறுவனம் உரிய சுகாதாரம் இன்றியும், பறவை இனங்கள், பூச்சிகள், தூசு உள்ளிட்ட அயற் காரணிகள் எளிதில் தயாரிப்பு பொருள்களில் கலந்திட வழிவகை உள்ளதும், காலாவதியான மூலப்பொருட்கள் அகற்றப்படாமல் வைத்து இருந்ததும்,  தயாரிக்கப்பட்ட பாதாம்பால் குளிர்பானம் பாட்டில்கள்  உரிய வகையில் பராமரிக்கப்படாததும் கண்டு உடனடியாக  அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் உபகரணங்கள் துருப்பிடிக்க ஏதுவாகவும், தயாரிப்பு கூடம் உரிய சுகாதாரமற்று காணப்பட்டது அதிர்ச்சி அடைய வைத்தது. கம்பெனியை உடனடியாக மூடச் செய்து  ஏழு தினங்களுக்குள் மேற்படி குறைபாடுகள் களைந்து , ஆய்வுக்கு பின் அனுமதித்தளித்த பிறகு தயாரிப்பு பணியை செய்திட வலியுறுத்தி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது .உடன் பாதாம்பால் குளிர்பானம் தரமறிய  உணவு மாதிரி சேகரம் செய்யப்பட்டது.  இதேபோல் மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் தொடர உத்தரவிட்டுள்ளதாக நியமன அலுவலர் தெரிவித்தார்.
உணவு பொருள் சார்ந்த புகாருக்கு 9444042322 என்ற எண்ணிற்கு அல்லது தமிழ்நாடுஉணவு பாதுகாப்பு நுகர்வோர் செயலில் புகார் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.
TAGGED: உணவு பாதுகாப்பு துறை அலுவலர், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர், ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆய்வு, குளிர்பான நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆய்வு, சுகாதாரமற்ற குளிர்பான நிறுவனம் ஆய்வில் அதிர்ச்சி அடைந்த  உணவுபாதுகாப்புதுறை  அதிகாரிகள் அதிரடியாக கம்பெனியை மூட உத்தரவு.
Social Vision August 20, 2024 August 20, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

பெரியார் உலகம்” கனவுத் திட்டத்திற்கு விசிக  ரூ,10,00,000/- வழங்கியது

October 23, 2025
மாவட்டங்கள்

ஒன்றிய அரசின் திட்டங்களை அரூர் பகுதிக்கு அதிகளவில் பெற்று தருவேன். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து எம்பி ஆ.மணி பேச்சு

July 19, 2024
ஆன்மிகம்

தருமபுரியில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா 

October 21, 2024
அரசு நல திட்டம்

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களை  தடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் 

March 21, 2025
Uncategorized

பொதுத் தேர்வெழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது நல் வாழ்த்துகள்.மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன்

March 3, 2025
மாவட்டங்கள்

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர செய்ய வலியுறுத்தி ஏஐடியுசி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

October 8, 2025

மேலும் படிங்க

ஆரோக்கியம்

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு மற்றும் திடீர் ஆய்வு

August 11, 2026
ஆரோக்கியம்

12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக 7 அன்று இளிகத்தில்  நெசவாளர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்

August 4, 2026
ஆரோக்கியம்

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

August 3, 2026
ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?