ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியத்தில் மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்.
ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியத்தில் மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு பொதுநூலகத்துறை ஒருங்கிணைந்த ஊர்புறநூலகர் அமைப்பு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் சார்பில்
முதலமைச்சரின்தனிபிரிவு மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள மனுவின் விபரம் பின்வருமாறு :
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை பொது நூலக இயக்கத்தில் 1915 ஊர்ப்புற நூலகங்களில் தற்பொழுது சுமார் 1034 ஊர்ப்புறநூலகர்கள்சுமார்13ஆண்டுகளாக +2 மற்றும் C.L.I.Sc., கல்வி தகுதியில் வேலை வாய்ப்பு பெற்றுஅலுவலகம் மூலம் பணியில் சேர்ந்து மிகவும் குறைந்த ஊதியத்தில் ரூ 12000முதல் ரூ 17000 வரை சிறப்பு காலமுறை ஊதியத்தில் சராசரி சுமார் 50 வயதுகளை கடந்து பணியாற்றி வருகிறோம்.கடந்த பிப்ரவரி 2024 மாதம் 446 பேருக்கு மூன்றாம் நிலை நூலகர் பதவிஉயர்வு வழங்கியமைக்கு எங்கள் இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நூலகங்கள் மீதும் வாசிப்பின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ள நமதுஅரசு கீழ்கண்டஎங்களது.கோரிக்கைகைள விரைவாக நிறைவேற்றித்தரவேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
12 ஆண்டுகளுக்கும் மேலாக தரம் உயர்த்தப்படாமல் உள்ள அனைத்து 1915 ஊர்ப்புற நூலகங்களையும் கிளை நூலகங்களாக தரம் உயர்த்த வேண்டும்.
சுமார் 222 கிளை நூலகங்கள் பதிவறை எழுத்தர் மற்றும் உதவியாளர் பணியிடங்களாக உள்ளது. இதனை விதியில் திருத்தம் செய்து மூன்றாம் நிலை நூலகர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.முனைவர் ராஜேந்திரன் அவர்களின் பொது நூலக சட்டத்திருத்த குழு அறிக்கையினை விரைவாக வெளியிட்டு அமல்படுத்த வேண்டும்.
தற்போது உள்ள ஊர்ப்புற நூலகர்கள் அனைவரும் 10 ஆண்டுகள் பணியினை நிறைவு செய்துள்ளதால் அதற்கான தேர்வுநிலை ஊதியம் 3 சதவீதம் அனுமதித்து அதற்கான நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.
தேர்தல் அறிக்கை வரிசை எண்.178-ன்படி அனைத்து ஊர்ப்புற நூலகர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
மேற்கண்ட எங்களது வாழ்வாதார கோரிக்கைகளை இந்திய நூலக தந்தை டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின் பிறந்த தினமான ஆகஸ்ட் 12 ல் நூலகர் தினத்தன்று நிறைவேற்றி எங்களது சுமார் 1034 ஊர்ப்புற நூலகர்களின் குடும்பங்களின் சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

