மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்! பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > இந்தியா > நம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்! பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் 
இந்தியா

நம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்! பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் 

Social Vision
Last updated: 2024/08/02 at 5:40 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

நம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்! பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் 

12-ஆம் வகுப்புத் தேர்வை இருமுறை எழுதியும் வெல்லமுடியாத மாணவி நீட் தேர்வில் 98%  மதிப்பெண் பெற்றது எப்படி?
நம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்! என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் , மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 720-க்கு 705 (98%) மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவி ஒருவர்,  அம்மாநில தேர்வு வாரியம் நடத்திய 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை இரு முறை எழுதியும் வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்துள்ளார்.  நீட் தேர்வு மாணவர்களின் உண்மையான திறனை வெளிக்கொண்டு வருவதில்லை என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.

குஜராத் மாநில கல்வி வாரியம் கடந்த மார்ச் மாதம் நடத்திய 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில்  வேதியியல் பாடத்தில் 31 மதிப்பெண்களும், இயற்பியல் பாடத்தில் 21 மதிப்பெண்களும் பெற்று தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து கடந்த மாதம் நடத்தப்பட்ட துணைத் தேர்வுகளை மீண்டும் எழுதிய அந்த மாணவி வேதியியல் பாடத்தில் சரியாக 33 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார். ஆனால்,  இயற்பியல் பாடத்தில் 22 மதிப்பெண்களை மட்டுமே எடுத்த அந்த மாணவி மீண்டும் தோல்வியடைந்துள்ளார்.

இதையும் படிங்க

வழக்கறிஞராக பணியாற்றிய மம்மூட்டி திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஆனது எப்படி !
ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!
கிருஷ்ணஜெயந்தி: உலகெங்கும் பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாள்

ஒப்பீட்டளவில் மாநிலப் பாடத்திட்ட பொதுத்தேர்வுகளை விட  நீட் தேர்வு கடினமானதாக கருதப்படுகிறது.  ஆனால், கடினமான நீட் தேர்வில் 98% மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த மாணவி, மிகவும் எளிதான 12-ஆம் வகுப்புத் தேர்வில் 33 மதிப்பெண்களைக் கூட எடுக்க முடியவில்லை என்பதிலிருந்து நீட் தேர்வை நடத்துவதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, காப்பியடித்தல் உள்ளிட்ட பல முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை இந்த நிகழ்வு உறுதி செய்திருக்கிறது. நீட்  தேர்வு மீதான நம்பகத் தன்மையை  இது மேலும் குலைத்துள்ளது.

நீட் தேர்வு மாணவர்களின் திறனை அளவிடுவதற்கான சரியான அளவுகோல் அல்ல, பயிற்சி மையங்களை உருவாக்கி கோடிக்கணக்கில் பணம் ஈட்டுவதற்கு மட்டும் தான் நீட் தேர்வு உதவும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக  வலியுறுத்தி வருகிறது. அது இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில்  மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும். என தனது எக்ஸ் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

TAGGED: @Neet, @pmk_Anbumaniramadoos, @pmk_ramadoos, @PMOIndia, @pmooffice, @Ramadasspmk, #BanNeet, #neet exam 2024, #SocialInjustice, NEET EXAM, நம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்! பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்
Social Vision August 2, 2024 August 2, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 23, 2026
மாவட்டங்கள்

தருமபுரி அதிமுக வேட்பாளர் இரா.அசோகனுக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர்கள் ஆதரவு

March 28, 2024
அரசு நல திட்டம்

குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது, கேட்டல், பேச்சு மற்றும் கற்றல் திறன் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது:கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

December 6, 2024
ஆயுள் கைதிகள் விடுதலை
அரசியல்

நீண்ட நாள் ஆயுள் கைதிகள் 10 இஸ்லாமியர்கள் விடுதலை திமுக அரசுக்கு ஜவாகிருல்லா நன்றி!

February 7, 2024
சினிமா

தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்

June 22, 2024
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ரூ 400 வரை கட்டணம் உயரும்  ஏப்.1-ம் தேதி முதல் அமல்

March 23, 2024

மேலும் படிங்க

இந்தியாசினிமா

வழக்கறிஞராக பணியாற்றிய மம்மூட்டி திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஆனது எப்படி !

September 7, 2026
இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!

September 4, 2026
ஆன்மிகம்இந்தியா

கிருஷ்ணஜெயந்தி: உலகெங்கும் பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாள்

September 3, 2026
இந்தியா

சகோதர பாசத்தின் புனிதப் பிணைப்பு: ஆகஸ்ட் 28-ல் ரக்ஷா பந்தன்

August 27, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?