மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒருவரின் சாதி என்ன என்று தெரிந்து கொள்வதில் என்ன பெருமை உள்ளது: மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > இந்தியா > ஒருவரின் சாதி என்ன என்று தெரிந்து கொள்வதில் என்ன பெருமை உள்ளது: மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி குற்றச்சாட்டு
இந்தியா

ஒருவரின் சாதி என்ன என்று தெரிந்து கொள்வதில் என்ன பெருமை உள்ளது: மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி குற்றச்சாட்டு

Social Vision
Last updated: 2024/08/01 at 1:56 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

ஒருவரின் சாதி என்ன என்று தெரிந்து கொள்வதில் என்ன பெருமை உள்ளது: மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி குற்றச்சாட்டு

மக்களவையில்  திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி பேசியதாவது:

ஒன்றிய பட்ஜெட்டில் கல்விக்காக உரிய நிதியை பாஜக அரசு ஒதுக்கவில்லை நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார். கல்விக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஒன்றிய அரசு குறைத்து கொண்டே வருகிறது. கல்விக்காக அதிக நிதி ஒதுக்குவது மாநில அரசுகள்தான். மாநில அரசுகள்தான் கல்விக்காக 50 சதம் நிதியை வழங்குகின்றன. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் மாநிலத்துக்கு நிதி தருவோம் என கூற ஒன்றிய அரசுக்கு அதிகாரம் தந்தது யார்? என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

மணிமேகலையின் கையில் இருக்கும் அட்சய பாத்திரத்தை பிடிங்கிக்கொண்டு பிச்சை பாத்திரத்தை கொடுப்பதுபோல் உள்ளது. தமிழ்நாட்டிற்கு கல்விக்கு உரிய நிதி ஒதுக்கவில்லை. குஜராத் முதலமைச்சராக இருந்த போது மாநில உரிமைகள் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இப்போது மாநில உரிமைகளை பறிக்கிறார்.

இதையும் படிங்க

வழக்கறிஞராக பணியாற்றிய மம்மூட்டி திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஆனது எப்படி !
ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!
கிருஷ்ணஜெயந்தி: உலகெங்கும் பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாள்

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்த முதல் மாநிலம் தான் தமிழ்நாடு என கனிமொழி கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் தற்போது காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்தியுள்ளார். மதிய உணவு திட்ட நிதியை ஒன்றிய அரசு குறைத்தது ஏன்? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

குலக் கல்வி முறையை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அரசின் திட்டங்கள் அமைந்துள்ளதாகவும், இந்தியுடன் சேர்த்து சமஸ்கிருதத்தையும் திணித்து வருகிறது ஒன்றிய அரசு என்றும் கனிமொழி எம்.பி. தெரிவித்தார். குலக் கல்வி முறையை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், சிறிய ஊர்களிலும் கல்லூரிகளை கொண்டு வந்தவர்தான் கலைஞர் என கனிமொழி கூறினார்.

நீட் தேர்வின் மூலம் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை ஒன்றிய அரசு சிதைக்கிறது. மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு என்பது தேவையில்லை. நீட் தேர்வை கொண்டு வந்ததன் மூலம் பயிற்சி மையங்கள் மட்டுமே பயன் பெறுகின்றன. நீட் தேர்வை கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவ கனவுகளை ஒன்றிய அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது என்று கனிமொழி எம்பி கூறினார்.

சாதி என்ற கட்டமைப்பை ஒழிக்க வேண்டும் என்று காலம் காலமாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். சாதியை வலியுறுத்தும் பிரதமர் தலைமையில் இயற்றப்படும் கல்வி திட்டத்தை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்று கனிமொழி எம்.பி. திட்டவட்டமாக கூறினார். ஒருவரின் சாதி என்ன என்று தெரிந்து கொள்வதில் என்ன பெருமை உள்ளது. சாதியற்றவர்களாக வாழ்வதில்தான் பெருமை உள்ளது என்று அவர் கூறினார்.

TAGGED: இனியும் தேவையா நீட் தேர்வு, ஒருவரின் சாதி என்ன என்று தெரிந்து கொள்வதில் என்ன பெருமை உள்ளது: மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி குற்றச்சாட்டு, கனிமொழி கருணாநிதி எம்பி தூத்துக்குடியில் வாக்குசேகரிப்பு, குலக்கல்விமுறை ரத்து
Social Vision August 1, 2024 August 1, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

பெண்கள் மீது முதலமைச்சருக்கு மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது –  கனிமொழி கருணாநிதி 

December 28, 2024
சினிமா

பிறந்த நாளில் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்.

February 17, 2024
மாவட்டங்கள்

இலக்கியம்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 2560 மனு பொதுமக்கள் அளித்தனர்: மனுக்கள் மீது ஒரு மாதத்திற்குள் தீர்வு ஆட்சியர் தகவல் 

July 15, 2024
அரசியல்

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 10 சுற்று வாக்கு எண்ணிக்கை திமுக  முன்னிலை 

June 4, 2024
மாவட்டங்கள்

இளைஞர் அணி சார்பில் ,முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்தநாள் விழா 

June 8, 2024
மாவட்டங்கள்

வைக்கோல் ஏற்றிவந்த லாரி மின்கம்பியில் உரசி விபத்து : ஓட்டுநர் உயிர் தப்பினார்

May 1, 2024

மேலும் படிங்க

இந்தியாசினிமா

வழக்கறிஞராக பணியாற்றிய மம்மூட்டி திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஆனது எப்படி !

September 7, 2026
இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!

September 4, 2026
ஆன்மிகம்இந்தியா

கிருஷ்ணஜெயந்தி: உலகெங்கும் பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாள்

September 3, 2026
இந்தியா

சகோதர பாசத்தின் புனிதப் பிணைப்பு: ஆகஸ்ட் 28-ல் ரக்ஷா பந்தன்

August 27, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?