மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழைக் கட்டாயப்பாடமாக்க, தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தமிழைக் கட்டாயப்பாடமாக்க, தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் 
தமிழ்நாடு

தமிழைக் கட்டாயப்பாடமாக்க, தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் 

Social Vision
Last updated: 2024/07/30 at 7:09 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
தமிழைக் கட்டாயப்பாடமாக்க, தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் 
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் “தமிழால் முடியும்” என்ற வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி  சென்னையில் உள்ள  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று  நடைபெற உள்ளது.  அன்னைத் தமிழ் வளர்ச்சிக்காக நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் வரவேற்கத்தக்கவை தான். ஆனால், அன்னைத் தமிழுக்கு கால் நூற்றாண்டுக்கும் மேலாக செய்து வரும் துரோகத்தை  இது போன்ற  நிகழ்ச்சிகள் எனும் முகமூடியை  போட்டு மறைக்கும்  தமிழக அரசின் முயற்சி வெற்றி பெறாது. அன்னைத் தமிழுக்கு தமிழக அரசு இழைத்து வரும் துரோகத்தை  மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
 சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்  தமிழை கட்டாய பயிற்று மொழியாக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி முதல்  102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்பதாகக் கூறிய அப்போதைய கலைஞர் அரசு, எட்டாம் வகுப்புக்கு மாற்றாக ஐந்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாய பயிற்றுமொழியாக   அறிவித்து  19.11.1999ஆம் நாளில் அரசாணை பிறப்பித்தது. ஆனால், அந்த அரசாணை செல்லாது என  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கலைஞர் அரசு  செய்த மேல்முறையீடு  25 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனது தொடர் வலியுறுத்தலின் காரணமாக அனைத்துப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் சட்டத்தை 09.06.2006-ஆம் நாள் சட்டப்பேரவையில் கொண்டு வந்து கலைஞர் அரசு நிறைவேற்றியது.  அதை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், 2015-16ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை நடைமுறைக்கு வந்திருக்க வேண்டிய தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டமும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வந்து தமிழைக் கட்டாயப் பாடமாகவும், கட்டாயப் பயிற்றுமொழியாகவும் கொண்டு வருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ, தமிழை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறது. அன்னைத் தமிழுக்கு எதிரான தமிழக அரசின் துரோகங்கள் இப்படியாகத் தான் தொடர்கின்றன.
எனவே, அன்னைத் தமிழுக்கு தொண்டு செய்வதாக நாடகமாடுவதை விடுத்து, பட்டப்படிப்பு  வரை தமிழ்க் கட்டாயப் பயிற்று மொழி,  12-ஆம் வகுப்பு வரை தமிழ்க் கட்டாயப்பாட மொழி, கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வ  நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அது தமிழக அரசால் முடியுமா? என தனது எக்ஸ் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
TAGGED: @CMOoffice, @மருத்துவர்இராமதாஸ், #பாமக_இராமதாஸ், தமிழை கட்டாயமும் ஆக்கவேண்டும், தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், தமிழைக் கட்டாயப்பாடமாக்க, தமிழ்நாடு தமிழ்வளர்ச்சித்துறை, பாமக
Social Vision July 30, 2024 July 30, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

முதல்வரின் அறிவிப்பிற்கு தர்மபுரி மாவட்ட புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வரவேற்பு.

July 12, 2024
இந்தியா

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.

March 15, 2024
அரசியல்

ஜூலை – 4 ல் தவெக மாநிலச் செயற்குழுக் கூட்டம்

June 27, 2025
சுற்றுலா

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 32000 கன அடி தண்ணீர் :குளிக்க பரிசல் இயக்கதடை

June 26, 2025
மாவட்டங்கள்

பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி போர்வெல் தொழிலாளி உயிரிழப்பு

April 15, 2025
உலகம்

புத்தர் பிறந்த நாள் புத்த பூர்ணிமா (2569) பெருவிழா,தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கம் வாழ்தது

May 11, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?