மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: எழுத்து வாசிப்பு பேச்சு மூன்றும் பள்ளிகளில் மறுமலர்ச்சி காணவேண்டும் – கவிஞர் வைரமுத்து 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > எழுத்து வாசிப்பு பேச்சு மூன்றும் பள்ளிகளில் மறுமலர்ச்சி காணவேண்டும் – கவிஞர் வைரமுத்து 
தமிழ்நாடு

எழுத்து வாசிப்பு பேச்சு மூன்றும் பள்ளிகளில் மறுமலர்ச்சி காணவேண்டும் – கவிஞர் வைரமுத்து 

Social Vision
Last updated: 2024/07/19 at 7:18 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
எழுத்து வாசிப்பு பேச்சு
மூன்றும்
பள்ளிகளில் மறுமலர்ச்சி
காணவேண்டும்
– கவிஞர் வைரமுத்து 
ஓர்
இலக்கியக் கவலையை
இவ்விடத்தில் சுட்டுரைக்கிறேன்
தமிழ்நாட்டுச் சூழலில்
இலக்கியத்தின் உடல்நிலை
ஆரோக்கியமாக இல்லை
அரசியலின்
பேரோசைகளுக்கும்
ஆன்மிகத்தின்
வாத்தியங்களுக்கும் மத்தியில்
இலக்கியத்தின் புல்லாங்குழல்
எடுபடவில்லை
இலக்கியவாதிகளுக்கு ஏற்புடைய
ஊடகங்களும் இல்லை
சிற்றிதழ்கள்
குறைந்தும் மறைந்தும்
இறந்தும் போயின
வணிகப் பத்திரிகைகளின்
இலக்கிய வெளி
இருளேறிக் கிடக்கிறது
சமூக ஊடகங்களின் எதிராடல்
கூட்டாண்மை நிறுவனங்களின்
கலாசாரச் சூறையாடல்
உள்ளூர்ப் பண்பாடுகளின்
உயிர்த் தேய்ப்பு
இவற்றை
எதிர்த்தாட இயலவில்லை
இளைத்த குரல்கொண்ட
எழுத்தாளர்களால்
காகிதச் சந்தைக்கும்
வாசகனுக்கும்
கட்டுபடி ஆகவில்லை
பதிப்பாளனுக்கும்
எழுத்தாளனுக்கும்
இருந்த கணக்குவழக்கு
இப்போது வழக்காக மட்டுமே
உண்மையின்
தீவிர எழுத்துக்காரன்
உயிர்ச்சேதம் சந்திக்கிறான்
இலக்கியப் பரிசுகள்
இரங்கல் கூட்டத்தில்
வழங்கப்படுகின்றன
துய்ப்புக் கலாசாரப் பட்டியலில்
இறுதியில் இருந்து
இப்போது இல்லாமல்
போய்விட்டது புத்தகம்
சிறந்த எழுத்தாளர்களின்
செவ்விலக்கியப் படைப்புத்திறன்
சினிமாவின் வர்த்தகப் பற்களில் அரைபட்டுவிட்டது
காதல் தோல்விக்கு முன்பே
தோல்வியுறுவது
கவிதைத் தொகுப்புதான்
இதை மீட்க வேண்டும்
பெருந்தொகை ஒதுக்கி
அரசு நூலகங்கள்
புத்தகங்கள் கொள்முதல்
செய்ய வேண்டும்
தமிழ்நாட்டுத்
தாய்மார்களுக்கு வழங்கப்படும்
உரிமைத் தொகைக்கு
நிகராகவேனும்
எழுத்தாளர்களுக்கு
உரிமத் தொகை
வழங்கப்பட வேண்டும்
எழுத்து வாசிப்பு பேச்சு
மூன்றும்
பள்ளிகளில் மறுமலர்ச்சி
காணவேண்டும்
வாரா வாரம்
இலக்கிய விழாக்கள்
ஆரவாரம் செய்யவேண்டும்
இலக்கியத்துக்கான இடத்தை
ஊடகங்கள் ஒதுக்க வேண்டும்
இலக்கியம் என்பது
ஒரு நாட்டின்
மொழி வளம் அல்ல;
மனித வளம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
TAGGED: @கவிஞர்வைரமுத்து, #இலக்கியம், #தமிழ், Social vision TV.in Tamilnadu news, எழுத்து வாசிப்பு பேச்சு மூன்றும் பள்ளிகளில் மறுமலர்ச்சி காணவேண்டும் - கவிஞர் வைரமுத்து, கவிஞர் வைரமுத்து, வாசிப்பு
Social Vision July 19, 2024 July 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ சார்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு.

February 10, 2024
மாவட்டங்கள்

பாலக்கோடு ஒன்றியத்திற்க்குட்பட்ட ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம்

October 2, 2024
Uncategorized

கடத்தூர், கம்பைநல்லூரில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் மற்றும் அபராதம்.

June 28, 2024
திமுக
மாவட்டங்கள்

தருமபுரியில் பிப்-18. ல் திமுக பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடத்த மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்.

February 15, 2024
ஆரோக்கியம்

விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் மருந்தகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் எச்சரிக்கை

July 23, 2024
அரசியல்

அரூர் பெரிய ஏரியை ஆழப்படுத்தி படகு இல்லம் பூங்கா அமைக்க மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

June 2, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026
தமிழ்நாடு

குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

June 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?