காரிமங்கலம் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்- திரளான பொதுமக்கள் பங்கேற்பு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 12-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார் அதன் தொடர்ச்சியாக, எந்தெந்த பகுதிகள் மிகவும் பின்தங்கிய மற்றும் மலைவாழ் மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளை தேர்வு செய்து அத்தகைய பகுதிகளில் அரசின் அனைத்து துறையினுடைய அலுவலர்களையும் அழைத்துச் சென்று, அரசு திட்டங்களை எடுத்துரைத்து, அங்குள்ள பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்கள்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்றைய தினம் காரிமங்கலம் வட்டம், மகேந்திரமங்கலம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஊராட்சிமன்ற தலைவர் குமார் தலைமையிலும், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் எம்.வீ.டி கோபால் முன்னிலையிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது.இது போன்ற தொலைதூர கிராமங்களில் வசிக்கக்கூடிய மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பிற அரசு அலுவலகங்களுக்கு வருகை தந்து கோரிக்கை மனுக்களை வழங்குவது என்பது மிகுந்த சிரமமான ஒன்றாகும்.இதற்காக அவர்களுக்கு மிகுந்த கால விரையமும் ஏற்படுவதோடு, வயதானவர்கள், பெரியோர்கள், கோரிக்கை மனுக்களை வழங்குவதற்கு பேருந்துகளில் வருவதற்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது, எனவே பொதுமக்களின் நலனை கருதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், 12 அரசு துறை அதிகாரிகள், கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்

