மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் பி.சண்முகம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் பி.சண்முகம்
தமிழ்நாடு

புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் பி.சண்முகம்

Social Vision
Last updated: 2024/07/14 at 4:08 PM
Social Vision
Share
3 Min Read
SHARE

புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்
பி.சண்முகம்

புதிய சட்டங்களை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனை கூட்டம் ஜூலை -14 அன்று தருமபுரி மாவட்டம் கடத்தூர் பஸ்நிலையம் அருகில் நடைபெற்றது.

வட்ட செயலாளர் செயலாளர் தி.வ.தனுசன் ,தலைமைவகித்தார்.
மத்தியகுழு உறுப்பினர் பி.சண்முகம் , சிறப்புறையாற்றினார்.
மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோ.அருச்சுணன் ,ஆர்.மல்லிகா ஒன்றியசெயலாளர்கள் அரூர் பி.குமார், மொரப்பூர் கே.தங்கராஜ் , மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.வஞ்சி கே.என்.மல்லையன், மற்றும் எஸ்.தீர்த்தகிரி , சொக்கலிங்கம், டி.சேகர் , மனோகரன்,கண்ணகி,கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் பேசினர்.

மத்திய குழு உறுப்பினர் பி.சண்முகம் பேசுகையில்:

இதையும் படிங்க

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு
புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

இந்தியாவில் 18 – ஆவது நாடாளுமன்ற தேர்தல் முடிந்து கூட்டணி கட்சி தயவுடன் ஆட்சி அமைத்த பிஜேபி, மூன்று குற்றவியல் சட்டங்களை ஜூலை 1 ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.சுதந்திர இந்தியாவில் சட்டம் நிறைவேற்றப்படுகிறது என்றால் சட்ட அமைச்சகம்,சட்டகமிஷன் இரண்டிலும் ஆலோசனை செய்து பாராளுமனற்த்தில் நிறைவேற்றப்படுவது நடைமுறை, ஆனால் 3 குற்றவியல் சட்டங்கள் நேரடியாக உள்துறை அமைச்சகத்தின் மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.பாராளுமன்றத்தில் விவாதிக்காமல் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு புதிய குற்றவியல் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது, ஜனநாயக விரோதமானது, சட்ட ஒழுங்கு மாநில அதிகாரத்திற்கு உட்பட்ட ஆகும். இந்திய சட்டம் 348 – பிரிவில் சட்டம் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும். மாறாக சமஸ்கிருதத்தில் உள்ளது.சமஸ்கிறுதம் மக்கள் வழக்கு மொழி அல்ல, யாருமே பேசாத மொழியில் எதற்கு சட்டம். இதன் மூலம் இந்துத்துவா கொள்கையை பிஜேபி புகுத்துகிறது.மொழிதிணிப்பை செய்கிறது.இந்த சட்டத்தின் மூலம் அரசுக்கு எதிராக பேசினால் ஜெயில்தான் பெயில்கிடையாது.பிரிட்டீஸ் ஆட்சிகாலத்தில் தான் இதுபோன்ற சட்டங்கள் இருந்தது.
விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.வேலையின்மை உள்ளது இதற்கு தீர்வுகான மத்திய அரசு தயாராக இல்லை.மாறாக நீதிபதி, நீதிமன்றம் மக்கள் உரிமையை பறிக்கும் நடவடிக்கையில் உள்ளது.
3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நாடுமுழுவதும் போராட்டம் நடத்திவருகிறது.கடந்த 2020 ம் ஆண்டு டிசம்பர் முதல் 2021- ம் ஆண்டு வரை 381 நாட்கள் வேளாண்மை விரோத சட்டத்தை வாபஸ்பெறகோரி டில்லியில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராடினர்.
தனிபெரும்பான்மையிடன் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது இதனை வாபஸ்பெறமுடியாது என்று சொன்ன மோடி அரசு விவசாயிகள் தொடர் போராட்டத்தின் விளைவாக விவசாயிகள் விரோத சட்டத்தை வாபஸ்பெற்றது.
அதேபோன்று இந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறும் வரை மார்க்சிஸ்ட் கட்சி போராடும் என தெரிவித்தார்.

சென்ற மக்களவையின் இறுதிக் கூட்டத்தில் ஜனநாயக விரோத முறையில் நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை ஜூலை 1 முதல் ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது.
இதுவரை நடைமுறையில் இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரிலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா என்ற பெயரிலும், இந்திய சாட்சியச் சட்டம் பாரதிய சாக்சிய அதினியம் என்ற பெயரிலும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. சட்டங்கள் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அரசியல் சாசன விதிகளுக்கு மாறாக, இந்தி, சமஸ்கிருத மொழியில் சட்டங்களின் பெயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன் உரிய விசாரணை மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்பது இதுவரையில் இருந்த நடைமுறை. இனி 14 நாட்கள் வரையிலும் இதனைத் தாமதப்படுத்த முடியும். இதுவரை காவல் நிலையத்தில் ஒரு கைதியை 15 நாட்கள் வரை மட்டுமே வைத்து விசாரிக்க முடியும். புதிய சட்டத்தின்படி 15 நாட்களுக்கு மேலாகவும் விசாரிக்கலாம். புதிய சட்டம் கை விலங்கு பூட்டுவதற்கும் வழிவகை செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எவர் ஒருவரையும் தேச துரோகி எனக் குற்றம் சுமத்தி கைது செய்வதற்கு புதிய சட்டம் இடமளிக்கிறது.
புதிய சட்டம் நலிவடைந்தவர்களையும், ஏழைகளையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் மட்டுமில்லாமல், அரசு அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையும் தண்டிக்கும் வகையில் அமைந்துள்ளது.இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கும் பாஜக அரசின் புதிய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

TAGGED: ஒன்றிய அரசின் புதிய சட்டம், புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் பி.சண்முகம்
Social Vision July 14, 2024 July 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்வேலைவாய்ப்பு

புதிய தொழில் முனைவோர் ரூ 10 இலட்சம் முதல் ரூ 5 கோடி வரை மானியத்துடன்‌ கடன் பெற விண்ணப்பிங்க!

June 26, 2024
Uncategorized

தொப்பூர் சோதனை சாவடியில் 2.61 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்.

March 27, 2024
சினிமா

பிறந்த நாளில் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்.

February 17, 2024
தமிழ்நாடு

வத்தல் மலைக்கு மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் துவக்கம் 

March 13, 2024
தமிழ்நாடு

சோழர் பாசனத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் எம்பி

July 4, 2025
தமிழ்நாடு

தருமபுரியில் கிருஸ்துமஸ் மற்றும் சிறுபான்மையினர் தினவிழா 

December 21, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடு

புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

August 28, 2026
தமிழ்நாடு

அடமான மோசடிகளைத் தடுக்க புதிய நடவடிக்கைவில்லங்கச் சான்றிதழில் அடமான பதிவு விவரத்தை உறுதி செய்த பின்னரே கடன் தொகை 

August 27, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?