மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: புதிய சட்டங்களை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனை கூட்டம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > புதிய சட்டங்களை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனை கூட்டம் 
மாவட்டங்கள்

புதிய சட்டங்களை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனை கூட்டம் 

Social Vision
Last updated: 2024/07/14 at 7:02 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

 

புதிய சட்டங்களை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனை கூட்டம் 

புதிய சட்டங்களை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனை கூட்டம் தருமபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பம் கிராமத்தில் நடைபெற்றது.

ஒன்றியசெயலாளர் என்.கந்தசாமி தலைமைவகித்தார்.மாவட்ட செயலாளர் ஏ.குமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர்கள்கே.பூபதி, எம்.அருள்குமார்,ஒன்றியகுழு உறுப்பினர்கள்பி.ரவி,கே.கோவிந்தசாமி, தீ.மாரியப்பன்,எம்.மீனாட்சி,எஸ்.தமிழ்மணி,எம்.பழனி உள்ளிட்டோர் பேசினர்.

அதனைதொடர்ந்து நாய்கன்கொட்டாய்,அரியகுளம், இலக்கியம்பட்டி, வெண்ணாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
சென்ற மக்களவையின் இறுதிக் கூட்டத்தில் ஜனநாயக விரோத முறையில் நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை ஜூலை 1 முதல் ஒன்றிய பாஜக அரசு  அமல்படுத்தியுள்ளது.
இதுவரை நடைமுறையில் இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரிலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா என்ற பெயரிலும், இந்திய சாட்சியச் சட்டம் பாரதிய சாக்சிய அதினியம் என்ற பெயரிலும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. சட்டங்கள் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அரசியல் சாசன விதிகளுக்கு மாறாக, இந்தி, சமஸ்கிருத மொழியில் சட்டங்களின் பெயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன் உரிய விசாரணை மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்பது இதுவரையில் இருந்த நடைமுறை. இனி 14 நாட்கள் வரையிலும் இதனைத் தாமதப்படுத்த முடியும். இதுவரை காவல் நிலையத்தில் ஒரு கைதியை 15 நாட்கள் வரை மட்டுமே வைத்து விசாரிக்க முடியும். புதிய சட்டத்தின்படி 15 நாட்களுக்கு மேலாகவும் விசாரிக்கலாம். புதிய சட்டம் கை விலங்கு பூட்டுவதற்கும் வழிவகை செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எவர் ஒருவரையும் தேச துரோகி எனக் குற்றம் சுமத்தி கைது செய்வதற்கு புதிய சட்டம் இடமளிக்கிறது.
புதிய சட்டம்  நலிவடைந்தவர்களையும், ஏழைகளையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் மட்டுமில்லாமல், அரசு அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையும் தண்டிக்கும் வகையில் அமைந்துள்ளது.இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கும் பாஜக அரசின் புதிய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
TAGGED: இந்திய சாட்சியச் சட்டம் பாரதிய சாக்சிய அதினியம், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, ஜனநாயக விரோத முறையில் நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல்சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரிலும், புதிய சட்டங்களை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனை கூட்டம்
Social Vision July 14, 2024 July 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #news #socialvisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dr_br_ambedkar
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள்விழா/ #congress #socialvisiontv
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள் விழா / #CPI(ML) #socialvisiontv
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

பழங்கள்
ஆரோக்கியம்

கோடை வெயிலில் உண்ண வேண்டிய 10 பழங்கள்

March 19, 2024
அரசு நல திட்டம்

பென்னாகரம் 109 பயனாளிகளுக்கு ரூ.27.60 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,  வழங்கினார்.

June 28, 2024
மாவட்டங்கள்

ரேசன் கடையில் ஆட்சியர் கி.சாந்தி திடீர் ஆய்வு

June 22, 2024
மாவட்டங்கள்

பென்னாகரம் பேருந்து நிலையம் தரமாக அமைக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தல்.

August 8, 2024
தமிழ்நாடு

தன்னை தேர்ந்தெடுத்தால் நல்ல திட்டங்களை கொண்டுவருவேன். தருமபுரி பாமக வேட்பாளர்  சௌமியா அன்புமணி பேட்டி

March 31, 2024
அரசு நல திட்டம்

 ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் சூரிய ஒளி குளிர்பதன அறை  மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு 

July 2, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரியில் இப்பதார் நிகழ்ச்சி

March 15, 2026
மாவட்டங்கள்

காரிமங்கலத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

March 10, 2026
மாவட்டங்கள்

இந்திய மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கம் 

March 9, 2026
மாவட்டங்கள்

பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் த.வெ.க,வுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?