பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து மகிளா காங்கிரஸ் தருமபுரியில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செலவபெருந்தகையை அவதூறாக கருத்துபரப்பிவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள் தலைமைவகித்தார்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் தீர்த்தராமன், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மோகன்,மாவட்ட பொதுச்செயலாளர் தங்கவேல், நிர்வாகி சென்றேன்,எஸ்சி/எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் சம்பத் மாவட்ட செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட பொருளாளர் மாதேஷ்வரன், இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேந்தன்,மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் சுமதி,ரேவதி,தனலட்சுமி,சங்கீதா,சின்னழகி,விஜயா,பூங்கொடி,விவசாயிகள் பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன் ,
சட்டமன்ற தொகுதி செயலாளர் யுவராஜ் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முத்து,சிறுபான்மையினர் பிரிவு நிர்வாகி முபாரக் உள்ளிட்டோர் பேசினர்.

