மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: TNPSC குரூப் -1 தேர்வுக்கு தருமபுரி மாவட்டத்தில்  8,314 தேர்வர்களில் 6257 தேர்வர்கள் தேர்வு எழுதினர் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > TNPSC குரூப் -1 தேர்வுக்கு தருமபுரி மாவட்டத்தில்  8,314 தேர்வர்களில் 6257 தேர்வர்கள் தேர்வு எழுதினர் 
கல்வி & வேலைவாய்ப்பு

TNPSC குரூப் -1 தேர்வுக்கு தருமபுரி மாவட்டத்தில்  8,314 தேர்வர்களில் 6257 தேர்வர்கள் தேர்வு எழுதினர் 

Social Vision
Last updated: 2024/07/13 at 2:50 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
TNPSC குரூப் -1 தேர்வுக்கு தருமபுரி மாவட்டத்தில்  8,314 தேர்வர்களில் 6257 தேர்வர்கள் தேர்வு எழுதினர் 
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை, அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  தேர்வு மையம் என பல்வேறு தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று (13.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – தொகுதி -1-ல் (Group-I) அடங்கியுள்ள பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு தருமபுரி மற்றும்  அரூர் கோட்டங்களில் மொத்தம் 25 இடங்களில் அமைக்கப்பட்ட 25 தேர்வு மையங்களில் இன்றைய தினம் (13.07.2024) சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 வரை நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 8,314 நபர்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு, இதில் 6257 தேர்வர்கள் இன்று இத்தேர்வினை எழுதி உள்ளனர். இத்தேர்விற்க்கு 2057 நபர்கள் தேர்வு எழுத வருகை தர வில்லை.
தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்வினை சிறப்பாக நடத்துவதற்கு 25 கண்காணிப்பு அலுவலர்களும், 5 மொபைல் யூனிட்டுகளும், ஒரு பறக்கும் படை குழு நியமிக்கப்பட்டனர். மேலும் காவல் துறையினரும் இத்தேர்விற்கான பாதுகாப்பு பணிகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.  தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்வு நடைபெற்ற அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், இத்தேர்விற்காக சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி – 1-ல் (Group-I) அடங்கியுள்ள பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடைபெற்ற அதியமான் கோட்டை, அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  தேர்வு மையம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களை மாவட்டஆட்சியர் கி.சாந்தி  இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தேர்வு மையங்களில் இத்தேர்வு எழுதுவதற்கு மேற்கொள்ளப்பட்டிருந்த வசதிகள், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததோடு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டுமென இத்தேர்வு பணிகளில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மற்றும் தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது நல்லம்பள்ளி வட்டாட்சியர் பார்வதி உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
TAGGED: @TNPSC, 314 தேர்வர்களில் 6257 தேர்வர்கள் தேர்வு எழுதினர், https://www.tnpsc.gov.in/, TNPSC group - 4 தேர்வு, TNPSC குரூப் -1 தேர்வு, TNPSC குரூப் -1 தேர்வுக்கு தருமபுரி மாவட்டத்தில்  8
Social Vision July 13, 2024 July 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

தென்னிந்தியாவின் லேடி சூப்பர் நயன்தாரா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோசூட் 

June 30, 2024
அரசியல்

வந்தே மாதரம் பாடலுக்கு முதன்மைத்துவம்: தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்!விசிக தலைவர் தொல்.திருமாவளவன் 

May 10, 2026
மாவட்டங்கள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உரிய ரசீது இல்லாத ரூபாய் 96500 கைப்பற்றப்பட்டது.

March 22, 2024
இந்தியா

நீட் ஒழியும் வரை போராட்டம் தொடரும்! கிராமப்புற, பின்தங்கிய மாணவர்களின் உரிமைக்காக திமுக உறுதியாக போராடும் : கனிமொழி கருணாநிதி உறுதி

July 22, 2026
உலகம்

உலக அகதிகள் தினம் World Refugee Day

June 19, 2024
இந்தியா

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் முனைவர் தொல்.திருமாவளவன் எம்பி வலியுறுத்தல் 

June 25, 2024

மேலும் படிங்க

இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!

September 4, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.

August 27, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

August 10, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்

August 9, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?