மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்  ஜூலை 11 முதல் செப்- 4 வரை 70 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.  ஆட்சியர் கி.சாந்தி தகவல் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்  ஜூலை 11 முதல் செப்- 4 வரை 70 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.  ஆட்சியர் கி.சாந்தி தகவல் 
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்  ஜூலை 11 முதல் செப்- 4 வரை 70 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.  ஆட்சியர் கி.சாந்தி தகவல் 

Social Vision
Last updated: 2024/07/12 at 12:41 PM
Social Vision
Share
3 Min Read
SHARE
தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்  ஜூலை 11 முதல் செப்- 4 வரை 70 முகாம்கள் நடத்தப்படவுள்ளது. 
ஆட்சியர் கி.சாந்தி தகவல் 
தருமபுரி மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்  ஜூலை 11 முதல் செப்- 4 வரை 70 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
ஆட்சியர் கி.சாந்தி தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளதாவது:
அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் செயல்படுத்திட சிறப்பு முகாம்களை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 18.12.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில் தொடங்கி வைத்தார். “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ், பல்வேறு துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு  முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புறங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகர்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 8.74 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
நகரப்பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பினை அடுத்து, தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 4.7.2024 அன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை ஊரகப் பகுதிகளிலும் விரிவுபடுத்தி ஜூலை 11 அன்று   தருமபுரியில் தொடங்கி வைத்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும்,  முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் பல்வேறு துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று 30 தினங்களுக்குள் தீர்வு காணும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் 11.07.2024 முதல் 04.09.2024 வரை 70 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற 15.07.2024 அன்று தருமபுரி வட்டாரத்திற்குட்பட்ட இலக்கியம்பட்டி பஞ்சாயத்திற்கு செந்தில் நகர், இலக்கியம்பட்டி, வின்சென்ட் திருமண மண்டபத்திலும், ஏரியூர் வட்டாரத்திற்குட்பட்ட சுஞ்சல்நத்தம், நாகமரை பஞ்சாயத்துகளுக்கு ஏரியூர் பொன்னப்பகவுண்டர் திருமணமஹாலிலும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்திற்குட்பட்ட சித்தேரி பஞ்சாயத்திற்கு சித்தேரி சமுதாய கூடத்திலும், பென்னாகரம் வட்டாரத்திற்குட்பட்ட சின்னம்பள்ளி, அரகாசனஅள்ளி, கலப்பம்பாடி, மஞ்சநாயக்கனஅள்ளி பஞ்சாயத்துகளுக்கு கலப்பம்பாடி VPRC கட்டிடத்திலும், நல்லம்பள்ளி வட்டாரத்திற்குட்பட்ட ஏ.ஜெட்டிஅள்ளி, தடங்கம் பஞ்சாயத்துகளுக்கு ஏ.ஜெட்டிஅள்ளி சமுதாய கூடத்திலும், காரிமங்கலம் வட்டாரத்திற்குட்பட்ட பிக்கனஅள்ளி, வெள்ளிசந்தை, ஜக்கசமுத்திரம், வெள்ளிசந்தை, திம்மராயணஹள்ளி பஞ்சாயத்துகளுக்கு பிக்கனஅள்ளி VPSC கட்டிடத்திலும், நடைபெற உள்ளது
மேலும் வருகின்ற 16.07.2024 அன்று தருமபுரி வட்டாரத்திற்குட்பட்ட அதகப்பாடி, சோகத்தூர் பஞ்சாயத்துகளுக்கு சோகத்தூர் NK மஹாலிலும், கடத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட ரேகடஅள்ளி, மோட்டாங்குறிச்சி, புளியம்பட்டி, சில்லாரஅள்ளி, சுங்கரஅள்ளி பஞ்சாயத்துகளுக்கு மோட்டாங்குறிச்சி, நத்தம்மேடு சமுதாய கூடத்திலும், அரூர் வட்டாரத்திற்குட்பட்ட அக்ரஹாரம்,  கொல்லபபட்டி,  மோப்பிரிப்பட்டி, செட்ரபட்டி,  வடுகப்பட்டி பஞ்சாயத்துகளுக்கு அரூர் கொங்கு திருமண மண்டபத்திலும், நல்லம்பள்ளி வட்டாரத்திற்குட்பட்ட அதியமான் கோட்டை, சிவாடி. பாகலஅள்ளி பஞ்சாயத்துகளுக்கு அதியமான் கோட்டை சமுதாய கூடத்திலும், காரிமங்கலம் வட்டாரத்திற்குட்பட்ட அண்ணாமலைஹள்ளி, அனுமந்தபுரம், எலுமிச்சனஅள்ளி, எர்ரசீகலஅள்ளி பஞ்சாயத்துகளுக்கு அனுமந்தபுரம் VPSC  கட்டிடத்திலும், நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து வருகின்ற 18.07.2024 அன்று தருமபுரி வட்டாரத்திற்குட்பட்ட அளேதருமபுரி, கடகத்தூர், கே.நடுஅள்ளி பஞ்சாயத்துகளுக்கு கடகத்தூர் லட்சுமிநாரயண கல்யாண மண்டபத்திலும், நல்லம்பள்ளி வட்டாரத்திற்குட்பட்ட பாலஜங்கமனஅள்ளி. நார்த்தம்பட்டி, நல்லம்பள்ளி பஞ்சாயத்துகளுக்கு நல்லம்பள்ளி பஞ்சாயத்து அலுவலகத்திலும், காரிமங்கலம் வட்டாரத்திற்குட்பட்ட மகேந்திரமங்கலம், ஜுட்டாண்டஅள்ளி, திம்மராயணஅள்ளி, பிக்கனஅள்ளி பஞ்சாயத்துகளுக்கு மகேந்திரமங்கலம் VPSC  கட்டிடத்திலும் நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 11.07.2024 முதல் 04.09.2024 வரை மொத்தம் 70 முகாம்கள் முகாம்கள் நடைபெற உள்ளது.
இம்முகாம்களில் கிராமப்புற மக்களுக்கு 15 அரசு துறைகள் மூலம்  44 வகையான சேவைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை தங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் வழங்கி விரைந்து தீர்வுகாண கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 தெரிவித்துள்ளார்.
TAGGED: @CMO office, @CMOoffice, @CMOSTALIN, @MKstalin, @mkstalinbirthday, #மக்களுஞன் முதல்வர் திட்டம், தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்  ஜூலை 11 முதல் செப்- 4 வரை 70 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.  ஆட்சியர் கி.சாந்தி தகவல், மக்களுடன் முதல்வர் திட்டம்
Social Vision July 12, 2024 July 12, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

பிஜேபியை கண்டித்து ஆர்பாட்டம்
தமிழ்நாடு

பிஜேபி அரசை கண்டித்து டில்லியில் தமிழக எம்.பி க்கள் போராட்டம் !

February 8, 2024
தமிழ்நாடு

ஆட்சியில் மக்கள் பணிகளை மேலும் செம்மையாக நடைமுறைப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 13 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம்.

June 11, 2024
மாவட்டங்கள்

கொளத்தூர் : பெரியார் நகரில் ரூ.110 கோடியில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் மருத்துவமனை

May 11, 2024
அரசியல்

பாலக்கோட்டில் பேரூர் கழக திமுக செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்

September 8, 2024
தொல்லியல்

தருமபுரி வரலாற்று சின்னமான   சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூண் புனரமைப்பு 

June 28, 2024
ஆரோக்கியம்

கரு கலைப்பை தடுக்க ஸ்கேன் மையங்களில் ஆய்வு நடத்த அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

March 1, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
அரசு நல திட்டம்

பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.

August 10, 2026
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026
அரசு நல திட்டம்

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: செப்.17 முதல் விரிவாக்கம் – முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

June 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?