மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழ்நாட்டிற்கு புதியதாக 5 மருத்துவக்கல்லூரி திறக்க மத்திய அரசு அனுமதி 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > தமிழ்நாட்டிற்கு புதியதாக 5 மருத்துவக்கல்லூரி திறக்க மத்திய அரசு அனுமதி 
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டிற்கு புதியதாக 5 மருத்துவக்கல்லூரி திறக்க மத்திய அரசு அனுமதி 

Social Vision
Last updated: 2024/07/08 at 5:34 PM
Social Vision
Share
3 Min Read
SHARE
தமிழ்நாட்டிற்கு புதியதாக 5 மருத்துவக்கல்லூரி திறக்க மத்திய அரசு அனுமதி 
இந்தியாவில் புதிதாக 113 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.
நாடு முழுவதும் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் அவசியம். அதன்படி அதற்கான விண்ணப்பங்கள் நாடு முழுவதும் இருந்து பெறப்பட்டன.
மொத்தம் 170க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து விண்ணப்பங்கள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 113 விண்ணப்பங்கள் புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், 58 விண்ணப்பங்கள் எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் புதிதாக 22 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மகாராஷ்டிரா – 14, ராஜஸ்தான் – 12, தெலங்கானா – 11, மேற்கு வங்கம் – 8, மத்தியப் பிரதேசம் – 7, ஆந்திரா – 7, கர்நாடகா – 5, தமிழ்நாடு – 5 என்ற அளவில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் உத்தரகண்ட் மாநிலத்துக்கு 3 புதிய மருத்துவக் கல்லூரிகளும், கேரளா, ஒடிசா, குஜராத் மாநிலங்களில் தலா 2 மருத்துவக் கல்லூரிகளும், ஹரியானா, டெல்லி, அசாம், பஞ்சாப், சிக்கிம், திரிபுரா மாநிலங்களுக்கு தலா ஒரு மருத்துவக் கல்லூரியும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்ட நிலையில், அவற்றை ஆய்வு செய்து, அதன்பேரில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலூரில் அன்னை மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் கிராமத்தில் தக்ஷசீலா மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம் அவனம்பட்டில் ஜே.ஆர். மருத்துவக் கல்லூரி, விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியில் கலசலிங்கம் மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் கல்குளத்தில் கன்னியாகுமரி மருத்துவ ஆராய்ச்சி மிஷன் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. இந்தக் கல்லூரிகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கான விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் மாற்றியிருக்கிறது. அதன்படி, ஒரு மருத்துவமனையானது, அனைத்துப் பிரிவுகளிலும் சிகிச்சை அளித்து அனைத்துத் துறை மருத்துவர்களையும் கொண்டிருந்தால் முதற்கட்டமாக 50 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையுடன் மருத்துவமனை தொடங்கலாம். அவ்வாறு தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறைந்தது 200 படுக்கை வசதி, 20 தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கை வசதி இருக்க வேண்டும். மேலும், நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் வலியுறுத்தியிருக்கிறது.
நாடு முழுவதும் இதுவரை 706 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தற்போது வழங்கப்பட்டிருக்கும் புதிய மருத்துவக் கல்லூரிகளையும் சேர்த்தால் மொத்த எண்ணிக்கை 800க்கு மேல் உயரும். ஆனால், இதில் 50 கல்லூரிகள் தான் அரசு மருத்துவக் கல்லூரிகள். மற்றவை தனியார் மற்றும் சுயநிதி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளாகும்.
கடந்த 2013–14 ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை 51,348 ஆக இருந்த நிலையில், 2023–24 ஆம் ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 1,08,990 ஆக உயர்ந்துள்ளது. முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை 2013–14 ஆம் ஆண்டு 31,185 ஆக இருந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டு முதல் 68,073 ஆக அதிகரித்துள்ளது.
TAGGED: ஆந்திரா – 7, இந்திய நாடு முழுவதும் 113 மருத்துவக்கல்லூரி திறக்க மத்திய அரசு அனுமதி, இந்தியமருத்துவகவுன்சில், உத்தரப்பிரதேசத்தில் புதிதாக 22 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மகாராஷ்டிரா – 14, கர்நாடகா – 5, தமிழ்நாடு – 5, தமிழ்நாட்டிற்கு புதியதாக 5 மருத்துவக்கல்லூரி திறக்க மத்திய அரசு அனுமதி, தெலங்கானா – 11, மத்தியப் பிரதேசம் – 7, மேற்கு வங்கம் – 8, ராஜஸ்தான் – 12
Social Vision July 8, 2024 July 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

பேருந்தில், மாட்டிறைச்சி எடுத்து சென்ற மூதாட்டியை இறக்கிவிட்ட விவகாரம் .  நடத்துனர். ஓட்டுனர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு

February 22, 2024
அரசு நல திட்டம்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக-7 இலளிக்கத்தில் இலவச சிறப்பு மருத்துவமுகாம்

August 4, 2024
மாவட்டங்கள்

பெரியாம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்பால் விபத்து ஏற்படும் அபாயம் சாலையை சீர்செய்ய கோரி ஆட்சியரிடம் மனு.

July 5, 2024
உணவுப் பொருட்கள் கலப்படம் கண்டறிந்து உணவு பாதுகாப்புத்துறை உரிய நடவடிக்கை.
ஆரோக்கியம்

தருமபுரி : பாலக்கோடு பகுதிகளில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் விழிப்புணர்வு.

February 5, 2024
விளையாட்டு
சாதனையாளர்கள்

கேலோ இந்தியா போட்டிகளில் 8 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று கலைச்செல்வி சாதனை

February 13, 2024
புத்தகம் பேசினால்

வைரியம் பெரு. சொக்கலிங்கம் : ஏக்கத்தின் கண்ணீர் நூல் வெளியீட்டு விழா

May 18, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

May 9, 2026
கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?