நீட் தேர்வை ரத்துசெய்யகோரி புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் இ.பி.புகழேந்தி தலைமைவகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வேடியப்பன்,எஸ்.எம்.அம்மாசி,என்.சரவணன்,பி.காவேரி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.மணி,கே.பண்ணீர்,பி.பழனி,பி.காவேரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.
பெரும் முறைகேடான ,ஏழை மாணவர்களின் நீட்தேர்வு கனவைபறிக்கும், மருத்துவத்துறையில் கேள்விகுறியாக்கி பெரும்முதலாளிகளுக்கு கொள்ளையடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

