மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தொப்பூர் மலைப்பாதையில் அதிவேகமாக சென்ற வாகனங்களுக்கு  ரூ.95,46,275/- அபராதம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > தொப்பூர் மலைப்பாதையில் அதிவேகமாக சென்ற வாகனங்களுக்கு  ரூ.95,46,275/- அபராதம் 
குற்றம்

தொப்பூர் மலைப்பாதையில் அதிவேகமாக சென்ற வாகனங்களுக்கு  ரூ.95,46,275/- அபராதம் 

Social Vision
Last updated: 2024/07/06 at 11:30 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
தொப்பூர்
மலைப்பாதையில் அதிவேகமாக சென்றவாகனங்களுக்கு ரூ.95,46,275/- அபராதம் 
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2024 முதல் ஜீன் 2024  வரை 6 மாதங்களில் போக்குவரத்து துறையின் சார்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் த.தாமோதரன்  தலைமையில், தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் அ.க.தரணீதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கு.வெங்கிடுசாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அதில், ஏறத்தாழ 7589 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 2984 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக காலாண்டு வரி செலுத்தாமல் இயக்குதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று புதுப்பிக்காமல் இயக்குதல், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்குதல் போன்ற குற்றங்களுக்காக 356 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.  மேலும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 155 வாகனங்களுக்கும், அதிக பாரம் ஏற்றிச்சென்ற 86 வாகனங்களுக்கும், அனுமதீச்சீட்டு இல்லாமல் இயக்கிய 97 வாகனங்களுக்கும், அதிவேகமாக வாகனங்களை இயக்கிய 1201 வாகனங்களுக்கும், தகுதிச்சான்று பெறாமல் இயக்கிய 195 வாகனங்களுக்கும், காப்புச்சான்று/புகைச்சான்று இல்லாமல் இயக்கிய 556 வாகனங்களுக்கும், சிகப்பு நிற பிரதிபலிப்பான் இல்லாமல் இயக்கிய 352 வாகனங்களுக்கும் மற்றும் சிகப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 211 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின் பொழுது அபராதம் விதிக்கப்பட்டது.
மேற்கண்ட வாகன சோதனையின் மூலமாக அரசுக்கு சாலை வரியாக ரூ.32,68,244/- (முப்பத்திரண்டு லட்சத்து அறுபத்தெட்டாயிரத்து இருநூற்று நாற்பத்து நான்கு மட்டும்) மற்றும் இணக்க கட்டணமாக ரூ.36,83,656/- (முப்பத்தாறு லட்சத்து எண்பத்து மூவாயிரத்து அறுநூற்று ஐம்பத்தாறு மட்டும்) ஆக மொத்தம் ரூ.69,51,900/- (ரூபாய் அறுபத்தொன்பது லட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து தொள்ளாயிரம் மட்டும்)  உடனடியாக வசூலிக்கப்பட்டது.  மேலும், இந்த வாகன சோதனை மூலம் பல்வேறு குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ.73,93,300/- (எழுபத்து மூன்று லட்சத்து தொண்ணூற்று மூவாயிரத்து முந்நூறு மட்டும்) நிர்ணயம் செய்யப்பட்டது.
கடந்த ஐனவரி 2024 முதல் ஜீன் 2024 மாதம் வரை 6 மாதங்களில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக அரசுக்கு வாகன சோதனை மூலம் மொத்தம் ரூ.1,43,45,200/- (ரூபாய் ஒரு கோடியே நாற்பத்து மூன்று லட்சத்து நாற்பத்தைந்தாயிரத்து இருநூறு மட்டும்) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
    மேலும், தொப்பூர் மலைப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட வேகவரம்பான 30 கி.மீ. மேல் இயக்கப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் வேகம் கண்காணிக்கும்  கருவி (Speed Radar Gun)  உதவியுடன் கடந்த 3 ஆண்டுகளில் 13,177 வாகனங்களுக்கு e-Challan மூலம் ரூ.95,46,275/- (ரூபாய் தொண்ணூற்று ஐந்து லட்சத்து நாற்பத்தாறாயிரத்து இருநூற்று எழுபத்து ஐந்து மட்டும்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் த.தாமோதரன் தெரிவித்துள்ளார்.
TAGGED: #RTO office, Dharmapuri RTO office, தொப்பூர் மலைப்பாதையில் அதிவேகமாக சென்ற வாகனங்களுக்கு  ரூ.95, தொப்பூர் மலைப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட வேகவரம்பான 30 கி.மீ. மேல் இயக்கப்படும் வாகனங்களுக்கு அபராதம்
Social Vision July 6, 2024 July 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #news #socialvisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dr_br_ambedkar
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள்விழா/ #congress #socialvisiontv
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள் விழா / #CPI(ML) #socialvisiontv
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் நிதியை அள்ளி, அள்ளி கொடுக்கும் ஒன்றிய அரசு, தமிழுக்கு கிள்ளி கூட கொடுப்பதில்லை: கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

February 16, 2024
மாவட்டங்கள்

அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் கேட்டு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மறியல்  போராட்டம்.

March 4, 2026
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
இந்தியா

இந்தியா : ஒருவருடத்தில் 5 இலட்சம் விபத்து 1.62 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

February 5, 2024
நகை திருட்டு
குற்றம்

மருத்துவமனை ஊழியர் வீட்டில் நகை திருட்டு

February 12, 2024
தமிழ்நாடு

வனவிலங்குகளிடமிருந்து விவசாயிகள்  பயிரை பாதுகாப்பதற்கு முறைபடுத்தப்பட்ட மின்வேலிகளை அமைக்க  விதிமுறைகள் வெளியீடு 

June 28, 2024
மாவட்டங்கள்

தருமபுரி  இறுதி வாக்காளர் பட்டியல்-2025 வெளியிடுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் 

January 3, 2025

மேலும் படிங்க

குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026
குற்றம்

நல்லம்பள்ளி அருகே தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி 

November 13, 2025
குற்றம்

முயல்கறியை விற்ற இருவருக்கு வனத்துறை அபராதம் விதிப்பு 

November 9, 2025
குற்றம்

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாலக்கோட்டில் மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

November 4, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?