மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் 33 சதவீதம் குறைப்பு: எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும். பாமக தலைவர் மரு.அன்புமணி 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் 33 சதவீதம் குறைப்பு: எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும். பாமக தலைவர் மரு.அன்புமணி 
அரசியல்வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் 33 சதவீதம் குறைப்பு: எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும். பாமக தலைவர் மரு.அன்புமணி 

Social Vision
Last updated: 2024/07/06 at 6:41 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் 33 சதவீதம் குறைப்பு: எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும்.
பாமக தலைவர் மரு.அன்புமணி 
தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 33% வரை குறைக்கப்பட்டிருக்கிறது.  பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை வளர்க்க வேண்டும் என்று அனைத்துத்  தரப்பினரும்  வலியுறுத்தி வரும் நிலையில், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மழுங்கடிக்கும்  வகையிலான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் உயர்நிலை மற்றும்  மேல்நிலைப்பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு  ஓர் ஆசிரியர் வீதம் ஒரு பள்ளிக்கு அதிகபட்சமாக 3 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.  ஆனால், இப்போது 700 மாணவர்கள் வரை ஒரே ஒரு உடற்கல்வி ஆசிரியரை நியமித்தால் போதுமானது; அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் அதிகபட்சமாக இரு ஆசிரியர்களை நியமித்தால் போதுமானது என பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த ஜூலை 2-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மேல்நிலைப் பள்ளிகளில் 400 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி இயக்குனர் வீதம் நியமிக்கப்படுவார்கள். ஆனால், இப்போது 1500 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் உடற்கல்வி ஆசிரியர், ஓர் உடற்கல்வி இயக்குனர் வீதமும், அதற்கும் கூடுதலாக மாணவர்கள் இருந்தால் கூடுதலாக ஓர் ஆசிரியரும் நியமிக்கப்படலாம் என்று  கூறப்பட்டுள்ளது. இது மிகவும் பிற்போக்கான நடவடிக்கை ஆகும்.
மாணவர்கள் வளரும் பருவத்தில் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உடற்கல்வி மிகவும் அவசியம் ஆகும். ஒரு பள்ளியில் 700 மாணவர்களுக்கு  ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்றால்,  அவர் 4 அல்லது 5 வகுப்புகளை ஒன்றாகச் சேர்த்து தான் உடற்கல்வி வகுப்பை நடத்த முடியும். ஒரே நேரத்தில் 150 முதல் 200 மாணவர்களை வைத்துக் கொண்டு யாருக்கும் விளையாட்டுகளைக் கற்றுத் தர முடியாது.
மாணவர்களைச் சுற்றிலும்  மது மற்றும் புகையிலைப் பொருட்கள் நிறைந்திருக்கின்றன.  அவற்றிலிருந்து மாணவர்களைக் காக்க வேண்டுமானால், அவர்களை விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்டவர்களாக மாற்ற வேண்டும். அதற்காக அவர்களுக்கு விளையாட்டைக் கற்றுத்தராவிட்டால் மாணவர்கள் வேறு திசையில் பயணிக்கும் ஆபத்து உள்ளது. இதை உணராமல் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களை குறைப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதெல்லாம், உடற்கல்வி பாடப்பிரிவில் மாணவர்களை முழுமையாக விளையாட அனுமதிக்க வேண்டும்; உடற்கல்வி வகுப்புகளை  வேறு ஆசிரியர்கள்  யாரும் கடன் வாங்கக் கூடாது என்று கூறி வருகிறார். ஆனால்,  அவரது நண்பர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அமைச்சராக இருக்கும் பள்ளிக்கல்வித் துறையோ, உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை  குறைக்க ஆணையிட்டுள்ளது. இது தான் விளையாட்டை வளர்க்கும் அழகா? இது தான் உதயநிதி ஸ்டாலினுக்கு வழஙகப்படும் மரியாதையா?
பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை அரசு திரும்பப் பெற வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகரித்தும்,  கட்டமைப்பை வலுப்படுத்தியும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
என தனது எக்ஸ் பக்கத்தில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்
TAGGED: @CMOtamilnadu, @MKstalin, @pmk_Anbumaniramadoos, pmk, Pmk_anbumani, அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் 33 சதவீதம் குறைப்பு: எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும். பாமக தலைவர் மரு.அன்புமணி
Social Vision July 6, 2024 July 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

February 6, 2026
தமிழ்நாடு

சாலை வசதி இல்லாத அலக்கட்டு மலை கிராமத்தில் பாம்பு கடித்து சிறுமி உயிரிழப்பு 

November 28, 2024
அரசியல்

புதுப்பிக்கப்பட்ட அண்ணா, கலைஞரின் நினைவிடத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

February 25, 2024
மாவட்டங்கள்

மேட்டுக்கொட்டாய் முதல் மலையூர் வரை உள்ள மண்சாலையை தார்சாலையை மாற்றக்கோரி மாவட்ட வன அலுவலரிடம் மனு.

June 27, 2024
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்.கி.சாந்தி இன்று (21.06.2024) தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்ததாவது.
மாவட்டங்கள்

கள்ளச்சாராயம் விற்பனை தொடரபான புகார்களை 6369028922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம்.

June 21, 2024
அரசியல்

கோவை கல்லூரி மாணவி-கூட்டு வல்லுறவு கொடூரம்: பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

November 5, 2025

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?