மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வனவிலங்குகளிடமிருந்து விவசாயிகள்  பயிரை பாதுகாப்பதற்கு முறைபடுத்தப்பட்ட மின்வேலிகளை அமைக்க  விதிமுறைகள் வெளியீடு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > வனவிலங்குகளிடமிருந்து விவசாயிகள்  பயிரை பாதுகாப்பதற்கு முறைபடுத்தப்பட்ட மின்வேலிகளை அமைக்க  விதிமுறைகள் வெளியீடு 
தமிழ்நாடு

வனவிலங்குகளிடமிருந்து விவசாயிகள்  பயிரை பாதுகாப்பதற்கு முறைபடுத்தப்பட்ட மின்வேலிகளை அமைக்க  விதிமுறைகள் வெளியீடு 

Social Vision
Last updated: 2024/06/28 at 6:17 PM
Social Vision
Share
3 Min Read
SHARE
வனவிலங்குகளிடமிருந்து விவசாயிகள்  பயிரை பாதுகாப்பதற்கு முறைபடுத்தப்பட்ட மின்வேலிகளை அமைக்க  விதிமுறைகள் வெளியீடு 
வன விலங்குகளை பாதுகாப்பதில், வனத்துறை தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், உயர் மின்னழுத்த மின் வேலிகளால் மின்விபத்து ஏற்பட்டு, வனவிலங்குகள் குறிப்பாக, யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இது தடுக்கப்பட வேண்டும். அதே வேளையில், காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில், வனவிலங்குகளால் சேதமடையும் விவசாய விளைபொருட்களைப் பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளின் நலனைப் பேணுதலும் முற்றிலும் அவசியமாகிறது. விவசாயிகள் தங்கள் பயிரை பாதுகாப்பதற்கு முறைபடுத்தப்பட்ட மின்வேலிகளை அமைப்பதற்கான விதிமுறைகளை அரசு நிர்ணயித்து 03-07-2023 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இது சூரிய சக்தி மின்வேலிகள் உள்ளிட்ட மின்வேலிகள் அமைப்பதையும் விவசாய நிலங்களை சுற்றி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளை பதிவு செய்வதையும் நடைமுறைப்படுத்தவும், வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் வழிவகுக்கிறது.
புதியதாக மின்வேலிகள் அமைப்பவர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்.
காப்புக்காட்டில் அறிவிக்கை செய்யப்பட்ட வனப்பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள விளை நிலங்களுக்கு மின்வேலிகளை அமைக்க சம்மந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரிடம் பதிவுசெய்வதுகட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதியதாக மின்வேலி அமைக்க விரும்புபவர்கள் மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி கோரி அரசு அறிவிக்கையில் வழங்கப்பட்டுள்ள படிவம்-1இல் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர் உரிய வழிமுறைகளின்படி அனுமதி பெற்ற பின் விதிமுறைகளை பின்பற்றி மின்வேலியை அமைத்த பின் அதனைபதிவுசெய்யஅரசுஅறிவிக்கையில் வழங்கப்பட்டுள்ள படிவம்-3 மற்றும் படிவம்-4இல் உறுதிமொழியுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர் மின்வேலி உரிய விதிமுறைகளின்படிஅமைக்கப்பட்டுள்ளதாஎன்பதை உதவி கோட்டப்பொறியாளர் பதவிக்குகுறையாத மின்சார அலுவலருடன் கூட்டுத் தணிக்கை மேற்கொண்டு ஆய்வு செய்து உறுதிசெய்த பின்னர் மாவட்ட வன அலுவலரால் அரசு அறிவிக்கையில்வழங்கப்பட்டுள்ள படிவம்-5இல் அனுமதி வழங்கப்படும்.
ஏற்கனவே மின்வேலிகள் அமைத்தவர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்.
காப்புக்காட்டில் அறிவிக்கை செய்யப்பட்ட வனப்பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஏற்கனவே மின்வேலிகளை அமைத்திருப்பவர்கள், தங்கள் வேலிகளை சம்மந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரிடம் பதிவு செய்வது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தவர்கள் அரசு அறிவிக்கையில் தெரிவித்துள்ள விவரக்குறிப்புகளின்படி (Specifications) தங்கள் நிலத்தில் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொண்ட பின்னர். அறிவிக்கை வெளியான நாளில் இருந்து 60 தினங்களுக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரிடம் மின்வேலியினை பதிவு செய்து கொள்ள அரசு அறிவிக்கையில் வழங்கப்பட்டுள்ள படிவம்-3இல் உரிய ஆவணங்களுடன் படிவம்-4இல்’ சூரிய மின்வேலி அமைத்த நிறுவனத்தின் உறுதிமொழியுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர் மின்வேலி உரிய விதிமுறைகளின்படிஅமைக்கப்பட்டுள்ளதா என்பதை உதவி கோட்டப்பொறியாளர் பதவிக்கு குறையாத மின்சார அலுவலருடன் கூட்டுத் தணிக்கை மேற்கொண்டு ஆய்வு செய்து உறுதி செய்த பின்னர் மாவட்ட வன அலுவலரால் அரசு அறிவிக்கையில் வழங்கப்பட்டுள்ள படிவம்-5இல் அனுமதி வழங்கப்படும்.
அவ்வாறு உரிய வழிமுறைகள் பின்பற்றாமல் இருப்பின் குறைபாடுகளை களைந்து மீண்டும் உட்பிரிவு (1)இன்படி மனுதாரரால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பொது.
மேற்கண்டவாறு பதிவு செய்யப்படும் சான்று 3 வருடங்களுக்கு செல்லத்தக்கதாகும்.மேற்கண்டவாறு அனுமதி பெற்று அமைக்கப்பட்ட மின்வேலிகளை சம்மந்தப்பட்ட வனச்சரக அலுவலர் மற்றும் மின்சாரத்துறை போர்மேன் ஆகியோரால் 15 தினங்களுக்கு ஒருமுறை கூட்டுத் தணிக்கை மேற்கொள்ளப்படும்.
பதிவு சான்றினை புதுப்பித்துக் கொள்ள சான்று காலாவதியாகும் தேதிக்கு மூன்று மாத காலத்திற்கு முன்னதாக மேற்குறிப்பிட்ட விதிமுறைகளின்படி மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
சூரிய மின்வேலியில், மின் இணைப்பு ஏதும் செலுத்தக்கூடாது. மேலும், மின்சாரம் செல்லும் பகுதியில் இருந்து 6 மீட்டர் இடைவெளி உள்ள பகுதிகளில் மட்டுமே சூரிய மின்வேலி அமைக்க அனுமதி வழங்கப்படும்.
சூரிய மின்வேலி அமைக்கும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.காப்பு நிலப்பகுதிகளில் (Reserve Land) சூரிய மின்வேலி அமைக்க அனுமதி இல்லை.சட்டவிரோதமாக மின் இணைப்புகள் கண்டறியப்படும் பட்சத்தில் வனச்சட்டங்களின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் விவசாயிகள் தங்களது நிலங்களில் உள்ள மின் இணைப்புகளுக்கு மின்சார கம்பிகளை சரிபார்த்து பராமரித்து வர வேண்டும். இது குறித்தான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வனத்துறை மூலம் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தேவை இருப்பின் புதியதாக சூரிய மின்வேலி அமைத்துக் கொள்ளவும் / ஏற்கனவே உள்ள சூரிய மின் வேலிகளை வனத்துறையால் பதிவு செய்திடவும் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு தருமபுரி
மாவட்ட வன அலுவலர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGGED: தமிழ்நாடு வனத்துறை, நிலத்தில் சூரிய மின்வேலி, வனத்துறை, வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க மின்வேலி, வனவிலங்குகளிடமிருந்து விவசாயிகள்  பயிரை பாதுகாப்பதற்கு முறைபடுத்தப்பட்ட மின்வேலிகளை அமைக்க  விதிமுறைகள் வெளியீடு
Social Vision June 28, 2024 June 28, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

கள்ளச்சாரயத்தை தடுக்க தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

June 21, 2024
அரசியல்

ஜூலை – 4 ல் தவெக மாநிலச் செயற்குழுக் கூட்டம்

June 27, 2025
மாவட்டங்கள்

தருமபுரி போலியோ சொட்டு மருந்து முகாம்

March 3, 2024
திமுக
மாவட்டங்கள்

தருமபுரியில் பிப்-18. ல் திமுக பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடத்த மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்.

February 15, 2024
அரசு நல திட்டம்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பென்னாகரம் வட்டத்தில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்.

February 21, 2024
மாவட்டங்கள்

ஓய்வுபெற்ற சத்துணவு,அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்.

July 13, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026
தமிழ்நாடு

குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

June 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?