மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்ட்லின் உத்தரவு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்ட்லின் உத்தரவு 
அரசு நல திட்டம்தமிழ்நாடு

சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்ட்லின் உத்தரவு 

Social Vision
Last updated: 2024/06/26 at 4:53 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்ட்லின் உத்தரவு 
தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி 2024-25 ஆம் ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன்
காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்  என  தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன்
காரீப் 2024-25 நெல் கொள்முதல் பருவத்திற்கு ஆதார விலையுடன் ஊக்கத்தொகையும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின தலைமையில் இன்று (26.06.2024) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கடந்த 2023-2024 காரீப் கொள்முதல் பருவத்தில் 25.06.2024 வரையில் 3,175 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3,72,310 விவசாயிகளிடமிருந்து 29,91,954 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.6,442.80 கோடி விற்பனை தொகையாக வழங்கப்பட்டது ஆகிய விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அதே அடிப்படையில், இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் 2024-2025 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த ஆண்டு 12.06.2024 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட இயலாத சூழ்நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவைத் தொகுப்பு திட்டத்தினை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்திட உத்தரவிட்டார்.
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் விவசாயிகளின் நலன் கருதி காரீப் 2024-2025 பருவத்திற்கான நெல் கொள்முதலினை 01.09.2024 முதல் மேற்கொள்ள ஒன்றிய அரசை, இவ்வரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் காரீப் 2024-2025 பருவத்திற்கான நெல் கொள்முதலினை 01.09.2024 முதல் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.
ஒன்றிய அரசு அண்மையில் காரீப் 2024-2025 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதாரவிலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,300/-என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,320/- என்றும் நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்தி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு,  2024-2025 காரீப் கொள்முதல் பருவத்திற்கு (Kharif Marketing Season) சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக  தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து வழங்கிடவும், அதன்படி விவசாயிகளிடமிருந்து  சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,405/- என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450/- என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  உத்தவிட்டுள்ளார்.
இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை  01.09.2024 முதல் நடைமுறைக்கு வரும்.  அத்துடன், தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, அடுத்துவரும் 2025-26 நிதியாண்டில், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500/- என்ற வீதத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  விவசாயிகளுக்கு வழங்கிடவும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
TAGGED: @CMO office, @MKstalin, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்ட்லின் உத்தரவு, சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்க முதல்வர் உத்தரவு
Social Vision June 26, 2024 June 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

செம்மாண்டகுப்பத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் 

July 25, 2024
புத்தகம் பேசினால்

தருமபுரியில் 6 ம் ஆண்டு புத்தக்த்திருவிழா அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செலவம் துவக்கிவைத்தார்.

October 4, 2024
அரசு கலைவிழா
தமிழ்நாடு

அரசுப் பள்ளிஆண்டு விழாவை அரசே நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

February 6, 2024
Uncategorizedமாவட்டங்கள்

பிஎஸ்என்எல், எம்ளாயீஸ் யூனியன் வேலை நிறுத்த கருத்தரங்கம்.

February 10, 2024
குற்றம்

குழந்தைதிருமணம் நடத்துபவர்களுக்கு 2 ஆண்டு சிறை ரூ 1 இலட்சம் அபராதம்  ஆட்சியர் கி.சாந்தி எச்சரிக்கை 

May 24, 2024
தமிழ்நாடு

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.

August 18, 2026

மேலும் படிங்க

தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடு

புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

August 28, 2026
தமிழ்நாடு

அடமான மோசடிகளைத் தடுக்க புதிய நடவடிக்கைவில்லங்கச் சான்றிதழில் அடமான பதிவு விவரத்தை உறுதி செய்த பின்னரே கடன் தொகை 

August 27, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?