மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தீர்வுகாண ஆட்சியர் கி.சாந்தி அலுவலர்களுக்கு உத்தரவு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தீர்வுகாண ஆட்சியர் கி.சாந்தி அலுவலர்களுக்கு உத்தரவு.
மாவட்டங்கள்

ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தீர்வுகாண ஆட்சியர் கி.சாந்தி அலுவலர்களுக்கு உத்தரவு.

Social Vision
Last updated: 2024/06/26 at 5:02 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தீர்வுகாண ஆட்சியர் கி.சாந்தி அலுவலர்களுக்கு உத்தரவு.

தருமபுரி, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக இன்று (26.06.2024) 1433-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தருமபுரி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1433-ம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) 25.06.2024 முதல் 28.06.2024 வரை வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெறுகிறது. அதன்படி, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2வது நாளாக இன்று வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதையும் படிங்க

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட கலப்பம்பாடி, மஞ்சிநாயக்கனஅள்ளி, கடமடை, புதுப்பட்டி, சின்னம்பள்ளி, அரகாசனஅள்ளி, பெரும்பாலை, பத்ரஅள்ளி, கெண்டேனஅள்ளி ஆகிய வருவாய் கிராமத்திற்கான தீர்வாயம் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த வருவாய் தீர்வாயத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று என மொத்தம் 228 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ளன. வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களையும் முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கிராம நிர்வாக அலுவலர் பராமரித்து வரும் பதிவேடுகள் மற்றும் வருவாய்த் துறையினுடைய ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ராஜசேகர், பென்னாகரம் வட்டாட்சியர் .சுகுமார், உதவி இயக்குநர் (நில அளவை) செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன் மற்றும் துணை வட்டாட்சியர்கள், பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

TAGGED: ஜமாபந்தி, ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, பென்னாகரத்தில் ஜமாபந்தி, பென்னாகரம் ஜமாபந்தி நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
Social Vision June 26, 2024 June 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

மல்லுப்பட்டி அரசு பள்ளியில், உணவு பாதுகாப்பு துறையினர் புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு.

November 22, 2024
தருமபுரி மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டம்
குழந்தைகள் உலகம்மாவட்டங்கள்

தருமபுரி மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டத்திற்க்கு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.

February 5, 2024
தமிழ்நாடு

தொப்பூர்அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் வாகனத்தில் அடிபட்டு இறப்பு 

June 7, 2024
மாவட்டங்கள்

சமூக நீதி பேசும் பாமக… மனுநீதி பேசும் பாஜக உடன்‌ கூட்டணி வைத்து ஏன் ? அமைச்சர்.உதயநிதி ஸ்டாலின் கேள்வி

April 8, 2024
மாவட்டங்கள்

தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் சங்கம் முற்றுகைப் போராட்டம்

July 22, 2026
மாவட்டங்கள்

குடிநீரின்றி தவிக்கும் குறவன்தின்னை மலைக்கிராம மக்கள்: காலிக் குடங்களுடன் போராட்டம். 

March 9, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?