தருமபுரி போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் போட்டி : வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்பி பரிசு வழங்கினார்.
தருமபுரி மாவட்ட காவல்துறை மற்றும் தர்மபுரி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய மினி மாரத்தான் போட்டியானது போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராயம் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் எதிரான மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் ஆண்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில் முதல் பரிசு சுபதா ஸ்ரீ , இரண்டாம் பரிசு குமுதா மூன்றாம் பரிசு கீர்த்திகா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆண்கள் பிரிவில் முதல் பரிசு லோகேஷ், இரண்டாம் பரிசு அன்பரசு, மூன்றாவது பரிசு நவீன் குமார்,ஆகியோர் வெற்றி பெற்றனர். மாரத்தான் போட்டியில் பெற்றவர்களுக்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் வேண்டும் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் தடகள அமைப்பு தலைவர் டி. எஸ். சரவணன் மாவட்ட விளையாட்டு அலுவலர் தே.சாந்தி மாவட்ட விளையாட்டு தடகளப் பிரிவு அமைப்பு செயலாளர் அருவி ஆகியோர் கலந்து கொண்டனர்

