மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கள்ளச் சாராய விவகாரத்தில் திமுக கவுன்சிலர்களுக்கு தொடர்பு :சிபிஐ விசாரணை தேவை எடப்பாடி கே.பழனிச்சாமி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > கள்ளச் சாராய விவகாரத்தில் திமுக கவுன்சிலர்களுக்கு தொடர்பு :சிபிஐ விசாரணை தேவை எடப்பாடி கே.பழனிச்சாமி
தமிழ்நாடு

கள்ளச் சாராய விவகாரத்தில் திமுக கவுன்சிலர்களுக்கு தொடர்பு :சிபிஐ விசாரணை தேவை எடப்பாடி கே.பழனிச்சாமி

Social Vision
Last updated: 2024/06/22 at 5:24 PM
Social Vision
Share
3 Min Read
SHARE

கள்ளச் சாராய விவகாரத்தில் திமுக கவுன்சிலர்களுக்கு தொடர்பு :சிபிஐ விசாரணை தேவை எடப்பாடி கே.பழனிச்சாமி

சட்டப்பேரவையில் இருந்து இன்றும் அதிமுக வெளிநடப்பு செய்தது. அதன் பின்னர், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, கள்ளச் சாராய மரணங்களுக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-ம் நாள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் போலவே அதிமுக நிர்வாகிகள் இன்றும் கருப்பு உடை அணிந்தவாறு சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். தொடர்ந்து சட்டப்பேரவை தொடங்கிய நிலையில், கேள்வி நேரத்துக்கு முன்பாகவே அதிமுகவினர் கள்ளச் சாராய சம்பவத்துக்கு நீதி கேட்டு அமளியில் ஈடுபட்டனர்.

கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக பேச வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை வைத்த நிலையில், நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என்றும், பேச வேண்டிய நேரத்தில் பேச அனுமதி தருகிறேன் என்றும் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார். இதனால் அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு
புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

அப்போது கள்ளச் சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் கோஷமிட்டவாறு வெளியேறினர்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியதாவது கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் குறித்து எதிர்க்கட்சி என்கிற முறையிலும், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்னும் அடிப்படையிலும், சட்டப்பேரவையில் மக்களின் பிரச்சினையை பேசுவதற்கு அனுமதி கேட்டோம். பலமுறை குரல் கொடுத்தோம். ஆனால், சட்டப்பேரவைத் தலைவர் பேசுவதற்கு அனுமதி மறுத்துவிட்டார்.

இது மக்களின் உயிர் பிரச்சினை. தினந்தோறும் மக்கள் இறந்து கொண்டே இருக்கின்றனர். இதைவிட பெரிதாக விவாதிக்க என்ன இருக்கிறது? இதற்காக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? எத்தனை பேர் மது அருந்தி உள்ளனர்? இதுவரை எத்தனை பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்? அவர்களின் நிலை என்ன? எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்? இந்த விவரங்களை எல்லாம் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் பேச அனுமதி கோரினோம். ஆனால், இன்றைக்கும் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.

இன்றைய தினம் வரை கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தால் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்தவகையில் இறப்புகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் அரசோ, மெத்தன போக்கில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அரசு வேகமாக செயல்பட்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். அதேபோல நேற்றைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒமிபிசோல் விஷமுறிவு ஊசிக்குப் பதிலாக ஓமிபிரசோல் எனும் அல்சருக்கு பயன்படுத்தப்படும் மருந்து குறித்து பேசியிருக்கிறார்.

ஓமிபிசோல் ஊசி அவர்களுக்கு எங்கும் கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி இன்றைக்கு அந்த மருந்தானது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவுகின்றன. ஆனால், இம்மருந்தானது மருத்துவத்துறையில் அங்கீகாரப்படி தடை செய்யப்படவில்லை. இந்த மருந்தை ஆபத்தான நேரத்தில் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மருந்தானது மருத்துவமனைகளில் தற்போது இல்லை.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தவறான கருத்துகளை தெரிவித்து வருகிறார். நாங்கள் இவ்விவகாரத்தில் பொய் பேசுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் காலதாமதமாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்கு வந்ததால் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். காலதாமதமாக அவர்கள் வருவதற்கு யார் காரணம்? அரசாங்கம் தான் காரணம்.

அந்த மாவட்டத்தின் ஆட்சியர், 3 பேர் இறந்தவுடன் அவர்கள் வயிற்றுவலி, வலிப்பு, வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டதாகவும், கள்ளச் சாராயம் வதந்தி என்றும் அறிவித்தார். மாவட்ட ஆட்சியர் உணமையை சொல்லியிருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். எனவே சுகாதாரத்துறை அமைச்சர் கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் காலதாமதமாக வந்தார்கள் என்று சொல்வது பச்சைப் பொய்யாகும். இது அரசின் கையாலாகாதனத்தை வெளிப்படுத்துகிறது. அரசின் நிர்வாகமின்மை காரணமாக இந்த நிலைமை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சியில் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளச் சாராய விற்பனை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அப்பகுதியில் உள்ள காவல்துறைக்கு தெரியாமல் கள்ளச் சாராய விற்பனையை செய்திருக்க முடியாது. மேலும், திமுக கவுன்சிலர்கள் 2 பேருக்கும், திமுக மாவட்டச் செயலாளருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே இவ்விவகாரத்தில் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் சிபிஐ வேண்டும். இதையொட்டியே நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளோம். நாங்கள் சட்டப்பேரவையில் இருந்து பயந்து வெளியேறவில்லை. முதல்வருக்கு தைரியம் இருந்திருந்தால் எங்களுடன் விவாதித்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

TAGGED: அதிமுக, எடப்பாடி கே.பழனிச்சாமி, கள்ளச் சாராய மரணம், கள்ளச் சாராய விவகாரம், சிபிஐ விசாரணை வேண்டும், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்
Social Vision June 22, 2024 June 22, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

ஒசூர்: ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டக் கோரியும், படிப்புக்கேற்ற வேலை வழங்க கோரியும் தமிழக தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டம்

May 6, 2024
மாவட்டங்கள்

தருமபுரி ஜூன் 21 ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

June 18, 2024
தமிழ்நாடு

தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு  

August 1, 2024
மாவட்டங்கள்

தருமபுரி செப் 26- ல் வாக்கு திருட்டை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். 

September 24, 2025
அரசு நல திட்டம்

தீர்த்த மலையில் பிப்-26 ல். இலவச கண் பரிசோதனை முகாம்

February 25, 2024
மாவட்டங்கள்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, மாற்ற முயற்சிக்கும், பிஜேபி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.

March 14, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடு

புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

August 28, 2026
தமிழ்நாடு

அடமான மோசடிகளைத் தடுக்க புதிய நடவடிக்கைவில்லங்கச் சான்றிதழில் அடமான பதிவு விவரத்தை உறுதி செய்த பின்னரே கடன் தொகை 

August 27, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?