மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வத்தல்மலை,  பெரியூர் கிராமத்தில் புதிய ஏடிஎம் (ATM) மையத்தினை  மாவட்ட ஆட்சியர்கி.சாந்தி, துவக்கிவைத்தார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > வத்தல்மலை,  பெரியூர் கிராமத்தில் புதிய ஏடிஎம் (ATM) மையத்தினை  மாவட்ட ஆட்சியர்கி.சாந்தி, துவக்கிவைத்தார்.
அரசு நல திட்டம்

வத்தல்மலை,  பெரியூர் கிராமத்தில் புதிய ஏடிஎம் (ATM) மையத்தினை  மாவட்ட ஆட்சியர்கி.சாந்தி, துவக்கிவைத்தார்.

Social Vision
Last updated: 2024/06/22 at 4:05 PM
Social Vision
Share
3 Min Read
SHARE
வத்தல்மலை, பெரியூர் கிராமத்தில் புதியஏடிஎம்(ATM)மையத்தினை
மாவட்டஆட்சியர் கி.சாந்தி, துவக்கிவைத்தார்.
தருமபுரி மாவட்டம், வத்தல்மலை,  பெரியூர் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்தியன் வங்கியின் புதிய ATM மையத்தினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, இன்று (22.06.2024) திறந்து வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,  தெரிவித்ததாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, இதுவரை பேருந்து வசதியே இல்லாத தருமபுரி மாவட்டம் வத்தல்மலைக்கு, முதன்முதலாக புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை அமைச்சர் பெருமக்களால் கடந்த 13.08.2022 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. தற்போது இப்பேருந்து வசதி மலை கிராம மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.
நகரப் பகுதிக்கு இணையாக மலைப்பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதியும் கிடைக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதல் படி மற்றும் இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஏடிஎம் மையம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
இதனால் தருமபுரி ஊராட்சி ஒன்றியம் வத்தல்மலை ஊராட்சி, பெரியூர், கட்டலங்காடு, கடுங்கல்லூர், சின்னாங்காடு, ஒன்றியகாடு, புலியனூர், மன்னாங்குளி நாய்க்கனூர், பால் சிலம்பு ஆகிய 9 மலை கிராமங்களில் உள்ள சுமார் 700 குடும்பத்தைச் சார்ந்த 5000-க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் மற்றும் கல்லூரி  மாணவ, மாணவியர்களின் கல்வி உதவித்தொகை, சுய உதவிக் குழுவின் கடன் தொகை, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் வழங்கப்படும் பால் பணம் பட்டுவாடா, 100 நாள் பணியின் மூலம் வழங்கப்படும் சம்பளத் தொகை, PM கிஷான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு கிடைக்கப் பெரும் ரூ. 6000 உள்ளிட்ட பல்வேறு வகையான நிதிகளை இப்புதிய  ஏடிஎம் மூலம் பெற்று,  பயன் பெற உள்ளனர்.
முன்னர் அவசர தேவைகளுக்காக வங்கியில் பணம் எடுக்க சுமார் 25 கிலோ மீட்டர் பயணம் செய்து தருமபுரி நகரப் பகுதிக்கு வந்து பணம் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போது இப்புதிய ஏடிஎம் மூலம் உடனடியாக பெற்று, பயன்பெற முடியும்.
மேலும், வத்தல்மலைக்கு அரசு  ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, பேருந்து வசதி சாலை வசதிகள் குடிநீர் வசதி, மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில்  கூடுதல் பேருந்து வசதி, ஆம்புலன்ஸ் வசதி, வங்கி கிளை போன்ற வசதிகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து  படிப்படியாக நிறைவேற்றப்படும்.
மகளிர் திட்டம் மற்றும் முன்னோடி வங்கியின் சார்பில் வத்தல்மலை பகுதியில் சிறப்பு முகாம் நடத்தி வங்கி கணக்கு மற்றும் ஏ.டி.எம் அட்டைகள் வழங்கும் பணி விரைவில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் வத்தல்மலையில் சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு ரூ.2.23 கோடி மதிப்பில் உணவகம் மற்றும் வாகனம் நிறுத்தம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர்  அவர்கள் ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு வழங்க ஒப்பந்ததாரர் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
    இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி தருமபுரி மண்டல மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த், துணை மண்டல மேலாளர் பீரேந்திர குமார், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் ராமஜெயம், வட்டாட்சியர் ஜெயசெல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யா, ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
TAGGED: Social vision tv.in tamilnadu, Tourist place, Vathal malai tourism, Vathalmalai tourist place, இந்தியன் வங்கி ஏடிஎம், துவக்கிவைத்தார்., பெரியூர் கிராமத்தில் புதிய ஏடிஎம் (ATM) மையத்தினை  மாவட்ட ஆட்சியர்கி.சாந்தி, வத்தல் மலையில் ஏடிஎம் வசதி, வத்தல்மலை, வத்தல்மலை சுற்றுலா தளத்தில் இந்தியன் வங்கி
Social Vision June 22, 2024 June 22, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #socialvisiontv #livenews #shortvideo #pmk
#shortsfeed #shortvideo #shortsviral #breakingnews #கனிமொழி
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சேரன்மாதேவி
புத்தகம் பேசினால்

சேரன்மாதேவி குருகுல போராட்ட வரலாற்று நூல் : பழ.அதியமான்

April 18, 2024
சிந்தனை செல்வன்
தமிழ்நாடு

வீராணம் ஏரியை போர்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ வேண்டுகோள்

April 29, 2024
Uncategorized

தமிழ்நாட்டில் தொடர்தோல்வி அடைத்த பிறகும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் பேச்சு 

July 11, 2024
Uncategorized

தென்னிந்தியாவில் ஹிட்டான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு.

April 28, 2024
தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தல் : மதுக்கடைகளை மூட உத்தரவு.

March 22, 2024
அரசியல்

திமுக மண்டல தேர்தல் பொறுப்பாளரான தங்கம் தென்னரசை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற விருதுநகர் வேட்பாளர் விஜய பிரபாகரன்

April 3, 2026

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?