ஒரு தாத்தாவும் எருமையும் : பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் ஆற்றாமையும்
ஓடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்வை நேரடி சாட்சியங்களாக அடையாளப்படுத்தியும் ஆவணப்படுத்தியும் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் பாமா, சாதியச் சமூகத்தால் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் ஆற்றாமைகளையும் விரித்தெழுதிய முப்பது சிறுகதைகளின் தொகுப்பு. அனுபவப்பூர்வமாக தாமறிந்த மனிதர்களை கதைமாந்தர்களாக்கி உலவ விட்டுள்ள இக்கதைகள் எளிதில் கடக்க இயலாத தன்மையைக் கொண்டவை.
நூல்; ஒரு தாத்தாவும் எருமையும்
வகைமை; சிறுகதைகள்
ஆசிரியர்; பாமா
வெளியீடு; என்.சி.பி.எச்
விலை; ரூ.270
நூலைப் பெற; 9790443979

