மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மத்திய அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2320 போதுமானதல்ல, பாமக அன்புமணி இராமதாஸ்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > மத்திய அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2320 போதுமானதல்ல, பாமக அன்புமணி இராமதாஸ்
மாவட்டங்கள்

மத்திய அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2320 போதுமானதல்ல, பாமக அன்புமணி இராமதாஸ்

Social Vision
Last updated: 2024/06/20 at 6:28 AM
Social Vision
Share
2 Min Read
anbumani ramadass
SHARE

மத்திய அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2320 போதுமானதல்ல, பாமக அன்புமணி இராமதாஸ்

மத்திய அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2320 போதுமானதல்ல, குவிண்டாலுக்கு தமிழக அரசு ரூ.800 வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி எம்பி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2024-25ஆம் ஆண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.117 உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் மூலம் சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலை 2,183 ரூபாயிலிருந்து 2300 ரூபாயாகவும், சன்ன ரக நெல்லுக்கான கொள்முதல் விலை 2,203 ரூபாயிலிருந்து ரூ.2320 ஆகவும் உயர்ந்திருக்கிறது. இது கணிசமான உயர்வு தான் என்றாலும் கூட வேளாண் உற்பத்திச் செலவுடன் ஒப்பிடும் போது இது போதுமானது அல்ல.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ. 2017 ஆக மதிப்பிடப்பட்டிருக்கிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி 50% லாபமாக ரூ.1009 சேர்த்து ஒரு குவிண்டாலுக்கான கொள்முதல் விலையாக ரூ.3026 நிர்ணயிக்கப்பட்டிருந்தால் உழவர்கள் ஓரளவாவது மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால், வேளாண் விளைபொருட்களுக்கான உற்பத்தி செலவுகளை கணக்கிடுவதற்காக மத்திய அரசு கடைபிடிக்கும் வழிமுறையில் உள்ள குளறுபடிகள் காரணமாக நெல்லுக்கான உற்பத்திச் செலவு குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. அதனால் கொள்முதல் விலையும் குறைகிறது. இது தான் உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் நெல் கொள்முதல் விலை போதுமான அளவில் இல்லை எனும் போது, அதை ஈடு செய்யும் வகையில் தமிழக அரசு தான் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத வகையில் சாதாரண நெல்லுக்கு, 82 ரூபாய், சன்ன ரக நெல்லுக்கு, 107 ரூபாயை கடந்த ஆண்டுக்கான ஊக்கத்தொகையாக தமிழக அரசு அறிவித்தது. நடப்பாண்டிலும் இதே அளவில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.2500-க்கூட தாண்டாது. இது உழவர்களுக்கு போதுமானதாக இருக்காது.

ஒதிஷாவில் புதிதாக பதவியேற்றுள்ள பாரதிய ஜனதா அரசு, அதன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலையை ரூ.3100 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு எந்த நேரமும் வரக்கூடும். இதற்கான மத்திய அரசின் கொள்முதல் விலையான 2300 ரூபாயுடன் ரூ.800 ஊக்கத்தொகை சேர்த்து வழங்கவுள்ளது. இதற்கு முன்பாகவே தெலுங்கானா மாநில அரசுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 500 ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. உழவர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் இந்த மாநில அரசுகளின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.

ஒதிஷா மாநில அரசிடமிருந்து தமிழக அரசும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒதிஷா மாநில அரசு வழங்கவிருப்பதைப் போல குவிண்டாலுக்கு ரூ.800 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அத்துடன் சேர்த்து ஒரு குவிண்டால் சாதாரண ரக நெல்லுக்கு ரூ.3100, சன்னரக நெல்லுக்கு ரூ.3120 கொள்முதல் விலையாக வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

TAGGED: @anbumani, anbumani ramadass, pmk, பாமக
Social Vision June 20, 2024 June 20, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

எழுத்து வாசிப்பு பேச்சு மூன்றும் பள்ளிகளில் மறுமலர்ச்சி காணவேண்டும் – கவிஞர் வைரமுத்து 

July 19, 2024
அரசியல்

திமுக மண்டல தேர்தல் பொறுப்பாளரான தங்கம் தென்னரசை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற விருதுநகர் வேட்பாளர் விஜய பிரபாகரன்

April 3, 2026
ஒகேனக்கல் குடிநீர் 2 திட்ட பணிகள்
அரசு நல திட்டம்தமிழ்நாடு

ஒகேனக்கல் குடிநீர் 2 திட்ட பணிகள் ரூ 7890 கோடி செலவில் நிறைவேற்றப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின்

March 11, 2024
மாவட்டங்கள்

அரூருக்கு வருகை தந்த விசிக எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜிக்கு வரவேற்பு

March 20, 2024
மேகதாது ராமதாஸ்
அரசியல்

மேகதாதுவில் புதிய அணை கட்டத் துடிப்பதா? உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டும்!

February 16, 2024
சினிமா

சென்னை மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கமல்ஹாசன் எம்பி  முன்னிலையில்  LEAD ON GANDHI” ஆவணப்படம் திரையில் 

February 14, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?